எந்திரன் 2 படத்தில் எமி ஜாக்சனின் கதாபாத்திரம் வெளியானது

Bookmark and Share

எந்திரன் 2 படத்தில் எமி ஜாக்சனின் கதாபாத்திரம் வெளியானது

ரஜினி தற்போது ‘கபாலி’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக மலேசியா சென்றுள்ளார். இருப்பினும், அவர் நடித்துக் கொண்டிருக்கும் மற்றொரு படமான ‘2.ஓ’ படத்தின் படப்பிடிப்பும் மறுபுறம் சென்னையில் நடைபெற்று வருகிறது.

‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் உருவாகி வருகிறது. ஷங்கர் இயக்கும் இப்படத்தில் எமி ஜாக்சன், அக்ஷய்குமார் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். இப்படத்தில் எமி ஜாக்சன் ஒரு ரோபோவாக நடிப்பதாக ஏற்கெனவே செய்தி வெளிவந்தது.

ஆனால், இப்போது ரோபோ தயாரிக்கும் ரஜினிக்கு உதவியாளராக நடிக்கிறாராம். இதன் படப்பிடிப்பு தற்போது சென்னைக்கு அருகே உள்ள ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அடுத்த வருடம் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.


Post your comment





Related News
ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் மார்ச்சில் படப்பிடிப்பு தொடங்குகிறது
சினிமா வசூலை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் - கார்த்திக் சுப்புராஜ் காட்டம்
சிக்கலில் ரஜினியின் பேட்ட
பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும் - வில்லனாக நடித்தது குறித்து விஜய் சேதுபதி பேச்சு
ரஜினிகாந்த் நலமாக உள்ளார் - வதந்திகளை நம்ப வேண்டாம்
“ஜீனியஸ்“ கல்வி பற்றி பேசும் படமாக இருக்கும் - இயக்குனர் சுசீந்திரன்
ஜீனியஸ் உண்மையான கதை - சுசீந்தரன்
கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை - ரஜினிகாந்த்
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்
பெரிய நடிகர்கள் நடிக்க யோசித்த கதையில் நான் புதுமுகத்தை அறிமுகம் செய்கிறேன் இயக்குனர் சுசீந்திரன் – ஜீனியஸ் பத்திரிகையாளர் சந்திப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions