யானையை துன்புறுத்தியதாக பஹத் பாசில் மீது புகார்

Bookmark and Share

யானையை துன்புறுத்தியதாக பஹத் பாசில் மீது புகார்

பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில். சமீபத்தில் நஸ்ரியாவை திருமணம் செய்து கொண்டவர். கடந்த சில தினங்களுக்கு முன்பு நஸ்ரியா ஒரு காரின் மீது தன் காரை இடித்துவிட்டு நடுரோட்டில் நின்று விவாதம் செய்தது பரபரப்பை கிளப்பியது.

தற்போது அடுத்த பரபரப்பு பஹத் மீது கிளம்பி இருக்கிறது. தற்போது பஹத்,  இயோபின்டே புஸ்தகம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பஹத், யானையின் தந்தத்தை பிடித்துக் கொண்டு உடற்பயிற்சி செய்வது போன்ற காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

இதனை வீடியோவாக எடுத்து யாரோ இணைய தளத்தில் பதிவேற்றம் செய்து விட்டார்கள். இதை பார்த்த கேரள மாநில விலங்குகள் நலச் சங்க உறுப்பினர் எம்.என்.ஜெயசந்திரன் என்பவர் பஹத் பாசில் மீது விலங்குகள் நல வாரியத்தில் புகார் அளித்துள்ளார்.  

"யானையின் தந்ததில் பஹத் பாசில் உடற்பயிற்சி செய்வது விலங்குகளை குறிப்பாக, யானைகளை நேசிப்பவர்கள் மனதை புண்படுத்தியுள்ளது. இது இளைஞர்களையும் இதுபோல செய்யத் தூண்டுவதாக உள்ளது.

எனவே இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தனது புகாரில் அவர் கூறியுள்ளார். தமிழில் வெளிவந்த கும்கி படத்தில் இதேபோன்று பல காட்சிகள் இடம் பெற்றிருந்தது ஜெயச்சந்திரன் சேட்டனுக்கு தெரியாது போலும்.


Post your comment





Related News
வேலைக்காரன் பட நடிகர் ஃபகத் பாசில் விடுவிக்கப்பட்டதன் பின்னணி! முழு தகவல் உள்ளே
நடிகை நஸ்ரியா பற்றி வைரலாக பரவிய செய்தி- உண்மையா?
நஸ்ரியா மீண்டும் நடிக்க வந்தால், நான் நிறுத்திவிடுவேன்!
மரண வலையில் இருந்து தப்பிய பிரபல நடிகர், நடிகை! அதிரவைத்த தருணம்
ரீமேக் படத்தில் நடிக்க மறுத்த பஹத்பாசில்
டபுள் ஆக்சன் ரோலில் சாதிப்பாரா பஹத் பாசில்?
வர்ஜின் படத்தில் முதல்முறையாக இணையும் பஹத் பாசில்-பார்வதி..!
பஹத் பாசிலுக்கு என்னதான் ஆச்சு ?
பஹத் பாசிலுடன் மீண்டும் ஜோடி சேரும் இஷா தல்வார்..!
பஹத் பாசில் படத்தின் டைட்டில் மாறியது...!


Upcoming Birthdays of Stars
tamil movie actress Bhagyashree Bhagyashree
(23-Feb)
tamil movie actor Nani Nani
(24-Feb)
tamil movie actress Pooja Bhatt Pooja Bhatt
(24-Feb)
 Go to More Profiles
Upcoming Tamil Movies
tamil movie Asuran Asuran
(15-Aug-2019)
tamil movie Ruthravathi Ruthravathi
(16-Jun-2019)
tamil movie LKG LKG
(09-May-2019)
 Go to More Movies
Latest Gallery

Tamil Star Cine Bites       watch tamil movie star cine bites videos

 Go to Cine Bites






About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions