கிறிஸ்துமஸூக்கு 5 படங்கள் ரெடி - பாலாவின் 'பரதேசி 'என்னாச்சு!

Bookmark and Share

கிறிஸ்துமஸூக்கு 5 படங்கள் ரெடி -  பாலாவின் 'பரதேசி 'என்னாச்சு!

வரும் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி ஐந்து படங்கள் ரிலீஸாக இருக்கின்றன. ஆனால் இந்த ரேஸில் டைரக்டர் பாலா தயாரித்த பரதேசி படம் கலந்து கொள்ளாமல் ஜனவரி மாதம் கடைசி வாரத்துக்கு தள்ளிப் போயிருக்கிறது.

‘சமர்‘, ‘கள்ளத் துப்பாக்கி’, ‘சட்டம் ஒரு இருட்டறை‘ ஆகிய 3 தமிழ் படங்களும், ‘தபாங் 2’ என்ற இந்திப்படமும், ஜாக்கிசானின் ‘சி இசட் 12’ என்ற ஹாலிவுட் படமும்  கிறிஸ்துமஸ்ஸில் ரிலிஸாகிறது.

‘கள்ளத்துப்பாக்கி’ படத்தை ரவிதேவன், முருகேசன் ஆகியோர் தயாரித்துள்ள இந்தப் படத்தை லோகியாஸ் டைரக்ட் செய்திருக்கிறார். கடந்த தீபாவளிக்கே ரிலீஸாக வேண்டிய இந்தப் படம் தியேட்டர்கள் கிடைக்காததால் கொஞ்சம் தாமதமாக ரிலீஸாகிறது.

எஸ்.ஏ.சந்திரசேகரின் பேத்தி சினேஹா பிரிட்டோ டைரக்ட் செய்திருக்கும் ‘சட்டம் ஒரு இருட்டறை’ படம் 21-ம் தேதி வருகிறது. இது விஜயகாந்த் நடித்து சுமார் 30 வருடங்களுக்கு முன்பு ரிலீஸான பழைய “சட்டம் ஒரு இருட்டறை” படத்தின் ரீமேக் காகும்.


விஷால் நடித்த ‘சமர்’ படம் 21-ஆம் தேதியிலிருந்து 28-ந் தேதிக்கு தள்ளி வைக்கப் பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் விஷால், ஜோடியாக த்ரிஷா நடித்திருக்கிறார்.


Post your comment





Related News
தல 60 குறித்து முதல்முறையாக வாய்திறந்த வினோத் - என்ன சொன்னார் தெரியுமா?
இந்த நடிகரை மணக்க நாடே விரும்புகிறது, தமன்னா யாரை சொல்கிறார் தெரியுமா?
ரஜினி பாணியில் அரசியலுக்கு வருகிறாரா தனுஷ்? அவரே சொன்ன தகவல்!
மகனுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட விஜய் சேதுபதி - வைரலாகும் புதிய வீடியோ!
சீனாவில் 56000 திரையரங்குகளில் வெளியாகிறதா 2.0 - உண்மை தகவல் என்ன?
பெண்கள் விளையாட்டு பொம்மைகள் அல்ல! - சீறும் வில்லன் நடிகர்!
2 வருடம் கழித்து 'சனம் ஷெட்டி'யை தேடிவந்த மிஸ் சௌத் இந்தியா-2016 பட்டம்..!
இந்தியன் 2 எப்போது துவங்கும்? வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்!
எப்போதும் ரசிகன் - இளையராஜாவுக்கு 96 இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா பதில்
ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய சூப்பர் சிங்கர் பிரகதி - ஷாக்கிங் புகைப்படங்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions