பெண்களை இழிவுபடுத்தி பாட்டு பாடுவதா?: கானா பாலா மீது பேரரசு பாய்ச்சல்

Bookmark and Share

பெண்களை இழிவுபடுத்தி பாட்டு பாடுவதா?: கானா பாலா மீது பேரரசு பாய்ச்சல்

திரைப்படங்களில் கானா பாடல்களை பாடி வருகிறார் ‘கானா பாலா’. படத்தில் டாஸ்மாக் கடையில் குடித்துவிட்டு ஆடும் காட்சிகளிலும், காதல் சோகத்தில் குத்தாட்டம் ஆடும் காட்சிகளிலும் இவர் பாடல்கள் இடம் பெறுகின்றன. ஆண்களை ஏமாற்றும் பெண்களை கடுமையான வார்த்தைகளால் விமர்சிப்பது போன்று இவரது பாடல் வரிகள் இருக்கின்றன.

இதற்கு டைரக்டர் பேரரசு கண்டனம் தெரிவித்து உள்ளார். பெண்களை இழிவுபடுத்தி பாடுவதை பாலா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரித்து உள்ளார்.

இதுகுறித்து பேரரசு கூறியதாவது:–

கானா பாலாவின் பாடல்கள் பெண்களை அவமதிக்கும் விதத்திலேயே உள்ளன. காதலித்து ஏமாற்றுபவர்கள் பெண்கள்தான். கணவன்மார்களை பெண்கள் ஏமாற்றுகிறார்கள்.

குடும்ப பெண்களும் கணவனுக்கு மோசம் செய்கிறார்கள் என்பதுபோல் பாடல்களை எழுதி பெண் குலத்தை கானா பாலா வசை பாடி வருகிறார். இனிமேல் இது மாதிரி பாட்டு எழுதுவதை பொறுத்து கொள்ள முடியாது. கானா பாலா மேல் பெண்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். இனிமேல் இதுபோல் அவர் பாடக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு பதில் அளித்து கானா பாலா கூறும்போது,

‘‘டைரக்டர்கள்தான் அதுபோன்ற பாடல்களை எழுதும்படி என்னை நிர்ப்பந்திக்கிறார்கள். மற்றபடி பெண்கள் மேல் நான் நிறைய மதிப்பு வைத்து இருக்கிறேன்’’ என்றார். 

 


Post your comment

Related News
திருமணத்துக்கு பின் ஆர்யாவுக்கு ஏன் இந்த வேலை - வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!
நேர் கொண்ட பார்வை படத்தின் புதிய அப்டேட்
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி
தமிழ் சினிமாவை இழுத்து மூடுங்கள் - வசந்த பாலன் ஆவேச பேச்சு
இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்
மணிகர்ணிகா ஆக்‌ஷன் காட்சிகளுக்காக ஒருநாளில் 12 மணிநேரம் செலவழித்தோம் - கங்கனா
ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தும் - கங்கனா ரணாவத்
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
வீடு தரகரை ஏமாற்றினேனா? கங்கனா ரணாவத் விளக்கம்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions