14 ஆண்டுகள் கழித்து நடிகை கவுதமி எங்கு போகிறார் தெரியுமா?

Bookmark and Share

14 ஆண்டுகள் கழித்து நடிகை கவுதமி எங்கு போகிறார் தெரியுமா?

கவுதமி 14 ஆண்டுகள் கழித்து மலையாள படத்தில் நடிக்கிறார்.உலக நாயகனை பிரிந்த பிறகு கவுதமி மீண்டும் படங்களில் கூடுதல் கவனம் செலுத்துகிறார்.

தனது மகள் சுப்புலட்சுமியை ஹீரோயினாக்க முயற்சி செய்து வருகிறார்.இந்நிலையில் கவுதமி மலையாள படம் ஒன்றில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.கவுதமி கடந்த 2003ம் ஆண்டுக்கு பிறகு மலையாள படங்களில் நடிக்காமல் இருந்தார்.

இந்நிலையில் அவர் பி.டி. குஞ்சு முகமது இயக்கும் விஸ்வாசபூர்வம் மன்சூர் படத்தில் மாடர்ன் அம்மாவாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.மலையாள படத்தில் கவுதமி பாத்திமா பீவி என்ற முஸ்லீம் பெண்ணாக நடிக்கிறார்.

மன்சூராக நடிக்கும் ஹீரோ ரோஷன் மேத்யூவுக்கு அம்மாவாக நடிக்கிறார் கவுதமி.கதைப்படி கவுதமியும் அவரது மகனும் பாசக்காரர்கள். ஒரு தாயும், மகளும் அவர்களின் வாழ்வில் வரும்போது எதிர்பாராத பல மாற்றங்கள் ஏற்படுகிறதாம்.

விஸ்வாசபூர்வம் மன்சூர் படத்தில் ஸ்வேதா மேனன், லியோனா லிஷாய், ரெஞ்சி பனிக்கர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். படத்திற்கு ரமேஷ் நாராயணன் இசையமைக்கிறார்.


Post your comment

Related News
வந்த இடத்திற்கே திரும்பிப் போக ஆசைப்படும் நடிகை கவுதமி
முதல் பட இயக்குனரே கணவரானது எப்படி?: நடிகை ஓபன் டாக்
துல்கர் சல்மான் ஹீரோயினுக்கு கல்யாணம்!
ஆர்.கே.நகரில் பாஜக சார்பில் களமிறங்குகிறார் கவுதமி? கங்கை அமரன் பெயரும் பரிசீலனை
கமல் கௌதமி அரசியலில் இறங்குகிறாரார்களா? சசிகலாவுக்கு எதிர்ப்பு
அம்மாவுக்கு மட்டும் ஏன் அப்படி செய்யவில்லை? சசிகலாவை விளாசிய கவுதமி
இது, இதற்காகத் தான் அம்மா 'ஓபிஎஸ்'ஐ தேர்ந்தெடுத்தார்: கவுதமி
ஜெயலலிதாவின் மரணத்தை வைத்து விளம்பரம் தேடிய கவுதமி - வெளிவந்த உண்மை?
மைக்கை தூக்கி போட்டு கௌதமி பாதியிலேயே பேட்டியிலிருந்து வெளியேறியது இதனால் தான்
கவுதமி பற்றி சொல்ல ஒன்னும் இல்லை: ஸ்ருதி ஹாஸன்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions