ஜெர்மன்-ஹாங்காங் மொழிகளில் வெளியாகும் ஸ்ரீதேவியின் 'இங்கிலிஷ் விங்கிலிஷ்'!

Bookmark and Share

ஜெர்மன்-ஹாங்காங் மொழிகளில் வெளியாகும் ஸ்ரீதேவியின் 'இங்கிலிஷ் விங்கிலிஷ்'!

ஆங்கில மொழி தெரியாத ஒரு பெண்ணாக நடிகை ஸ்ரீதேவி நடித்து தனக்குள்ள மொழி தடைகளைத் தாண்டி அம்மொழியில் எப்படி தேர்ச்சி பெறுகிறார். என்பதை எடுத்துக்காட்டியது ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’.


இப்படம், மொழியின் எல்லை மட்டுமின்றி, நாட்டின் எல்லைகளையும் தாண்டி வெளியிடப்படப் போவதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்பொழுது இந்தப்படம் ஜெர்மன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 20 பிரிண்ட்டுகள் எடுக்கப்பட்டு, மே மாதம் திரைக்கு வரப்போவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.


மேலும் இந்த வார இறுதியில், ஹாங்காங் நாட்டிலும், அவர்களது மொழியில் வசனப் பதிவுகளுடன் வெளியிட இருப்பதாகவும், ஒரே நாளில் 29 காட்சிகள் திரையிடப்படும் எனவும், சிவப்புக் கம்பள வரவேற்பு எனக் கருதப்படும் டைரக்டர்ஸ் கிளப்பிலும் இப்படம் காட்சிக்கு வருகிறது என்றும் அந்நிறுவனம் தெரிவித்தது.


ஆங்கிலம் பேசாத மக்களுக்கு, இந்தப் படம் ஒரு நல்ல மன தைரியத்தை பெற்றுத்தரும் என்றும், இப்படம் மேலும் பல மொழிகளில் வரவேண்டும் என்றும், இதில் நடித்த ஸ்ரீதேவி கருத்து தெரிவித்தார்.


இவ்வாறு உலக மொழிகளில் தனது படம் வெளிவருவது மகிழ்ச்சி அளிப்பதாக அப்படத்தின் இயக்குனர் கௌரி ஷிண்டே தெரிவித்தார்.


Post your comment





Related News
சுதா கொங்காரா படத்திற்காக அமெரிக்கா செல்லும் சூர்யா
சீனாவை திரும்பி பார்க்க வைத்த `தங்கல்' படக்குழுவின் அடுத்த திட்டம்
உத்தம வில்லனால் தாமதமாகும் மஞ்சு லக்ஷ்மியின் தொங்கடா
6 ஆயிரம் மேடை நிகழ்ச்சிகள் நடத்திய நடிகர் கிங்காங்!
பழம்பெரும் சினிமா தியேட்டர்களை பாதுகாக்கும் ஜெர்மன் கலாச்சாரத்துறை
பாக்ஸ் ஆபீசை கலக்கிவரும் \'ஐ\' திரைப்படம்! ஹிந்தியில் இன்று ரிலீஸ்
தமிழ் தெரியாத நடிகைகளுக்கு சம்பளத்தை குறைக்கனும்: ராதாரவி அதிரடி..!
இருமொழிகளில் சுதீப்பை வைத்து இயக்கும் பேரரசு..!
பாடி லாங்குவேஜை மாற்றும் வடிவேலு..!
நடிகை அஞ்சலி ஜெர்மனியில் தலைமறைவு - பரபரப்பு தகவல்.








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions