காதலன், 24 படங்களில் நடித்த பிரபல நடிகர் கிரீஷ் கர்னாட் காலமானார் – பதறவைக்கும் தகவல்!

Bookmark and Share

காதலன், 24 படங்களில் நடித்த பிரபல நடிகர் கிரீஷ் கர்னாட் காலமானார் – பதறவைக்கும் தகவல்!

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கிரிஷ் கர்னாட்டின் பல உடல் உறுப்புகள் செயலிழந்தால் சிகிச்சை பலனின்றி அவரின் உயிர் பிரிந்தது.1938-ஆம் ஆண்டு பிறந்த கிரிஷ் கர்னாட் 60-களில் கன்னட நாடக துறையில் கால்பதித்து அதில் பல புதுமையை புகுத்தினார்.

பின்னர் 70-களில் திரைப்படத் துறையில் இயக்குநராக பணியாற்றியவர், தமிழில் குணா, காதலன், ரட்சகன், செல்லமே, ஹேராம் உள்ளிட்ட ஏராளமான படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக தமிழில் மிஷ்கினின் முகமூடி, சூர்யாவின் 24 ஆகிய படங்களிலும் இவர் நடித்திருந்தார்.இவர் 10 தேசிய விருதுகளை வென்றவர்.

பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், சங்கீத நாடக அகாடமி உள்ளிட்ட விருதுகளையும் வாங்கியிருக்கிறார். கிரிஷ் கர்னாட்டின் ராக்ட் கல்யாண்ட் காலம் கடந்தும் சிறந்த நாடகமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

கிரிஷ் கர்னாட்டின் மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பாக நாசர், மற்றும் நடிகர்கள் கமல் ஹாசன், ராணா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுமட்டுமில்லாமல் கர்னாட்டின் மறைவிற்கு பலரும் தங்களது இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions