ஞானவேல்ராஜாவின் பாகுபலி பயம்

Bookmark and Share

ஞானவேல்ராஜாவின் பாகுபலி பயம்

படத்தின் வெற்றி தோல்வியை யாராலும் கணிக்க முடியாது,அச்சூத்திரம் தெரியாமல்தான் திரைத்துறையினர் திணறிக்கொண்டிருக்கிறார்கள். தயாரிப்பாளர் தம் படம் சரியாகப் போகாது என்று நினைத்து குறைந்தவிலைக்கு படத்தை விற்றிருப்பார் . அப் படம் யாருமே எதிர்பார்க்காதவகையில் வசூலில் சக்கைப்போடு போடும்.  

வசூல் சாதனை படைத்த சின்னதம்பி, கரகாட்டக்காரன், திருடா திருடி போன்ற பல படங்கள் இப்படித்தான் குறைந்த விலைக்கு விற்கப்பட்டு வாங்கியவிலையைவிட பல மடங்கு வசூலைக்குவித்தது. தற்போது வெளியான படங்களில் வசூலில் சக்கைப்போடுபோட்ட படம் என்றால் பாகுபலி படம்தான்.

தெலுங்கில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தை தமிழில் வெளியிட வேண்டும் என்பதற்காக க்ளோசப் ஷாட்களில் மட்டும் தமிழ் வசனத்தைப் பேச வைத்து ஷூட் செய்திருந்தார்கள்.

எனினும் பாகுபலியில் தெலுங்குவாடை தூக்கலாகவே இருந்தது. ஆரம்ப பில்ட்அப்பை நம்பி பல கோடி ரூபாய் கொடுத்து இப் படத்தின் தமிழ்ரைட்ஸை வாங்கினார் ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா.

திடுமென்று படம் ஓடுமா ஓடாதா என்ற பயத்தில் பாகுபலி படத்தை கூடுதலாக சில கோடி சேர்த்து தேனான்டாள் ஃபிலிம்ஸ் முரளியிடம் விற்றுவிட்டார். முரளியின் யோகம் பாகுபலி படம் பெரிய வெற்றியடைந்து  செம வசூலைக் கொடுத்திருக்கின்றது.   


Post your comment





Related News
இசை நிகழ்ச்சியை ஒத்தி வைத்ததால் யுவன் ஷங்கர் ராஜா அதிருப்தி!
தளபதி 65 படத்தின் இயக்குனர் இவர்தான் - வெளிவந்த சூப்பர் அப்டேட்!
என்.ஜி.கே-வைத் தொடர்ந்து முதல்வராகும் சூர்யா; அவரே சொன்ன தகவல்!
எப்போதும் ரசிகன் - இளையராஜாவுக்கு 96 இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா பதில்
தொடர் தோல்விகளால் கடும் சிக்கலில் சிவகார்த்திகேயன் – அடுத்த முடிவு என்ன தெரியுமா?
மாநகரம் இயக்குனரை தொடர்ந்து விஜயை சந்தித்த பிரபல இயக்குனர் - இவருமா?
சூப்பர் ஸ்டாரை முதல்முறை இயக்கும் ராஜமௌலி – வெளிவந்த சூப்பர் தகவல்!
ராஜாவுக்கு செக்.. சேரனுக்கு செக் வைக்காமல் இருந்தால் சரி தான்.!
விஜய்யுடன் மீண்டும் இணைவதை உறுதிப்படுத்திய மோகன்ராஜா
நந்தாவும், ரமணாவும் என்னை அவமானப்படுத்தினார்கள் - பார்த்திபன் பரபரப்பு பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions