வடிவேலு வசனத்தை படத்தலைப்பாக்கிய ஜி.வி.பிரகாஷ்

Bookmark and Share

வடிவேலு வசனத்தை படத்தலைப்பாக்கிய ஜி.வி.பிரகாஷ்

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ‘டார்லிங்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானார். திகில் மற்றும் காமெடியுடன் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவருக்கு பல பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. ‘டார்லிங்’ படத்தை இயக்கிய சாம் ஆண்டன் புதிய படத்தை இயக்கவுள்ளார். இதில் நாயகனாக மீண்டும் ஜி.வி.பிரகாஷ் நடிக்க இருக்கிறார்.

இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இப்படத்திற்கு தலைப்பாக வடிவேலு நடித்த ‘வின்னர்’ படத்தில் இடம்பெற்ற பிரபலமான வசனமான ‘கைப்புள்ள’ என்ற வார்த்தையை வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

காமெடி படமாக உருவாக இருக்கும் இப்படத்திற்கு ‘கைப்புள்ள’ என்ற தலைப்பு கச்சிதமாக இருக்கும் என்ற நோக்கத்தில் தலைப்பை தேர்வு செய்திருக்கிறார்களாம்.

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தை தவிர ‘புரூஸ் லீ’ என்ற படத்திலும் நடிக்க இருக்கிறார். வித்தியாசமான தலைப்புகளை தேர்வு செய்து வரும் ஜி.வி.பிரகாஷின் படங்கள் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.


Post your comment





Related News
இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
நேர் கொண்ட பார்வை படத்தின் புதிய அப்டேட்
சூர்யா 38 படத்தின் புதிய அப்டேட்
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
அஜித்தை கவர்ந்த படம்
எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்
காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions