ஜி.வி.பிரகாஷ் இசையில் யுவன் பாடும் பாடல்

Bookmark and Share

ஜி.வி.பிரகாஷ் இசையில் யுவன் பாடும் பாடல்

இன்றைய இளம் இசையமைப்பாளர்களுக்குள் நிறையவே ஒற்றுமை உள்ளது. ஒருவர் இசையில் மற்றவர் எந்த ஈகோவும் இல்லாமல் வந்து பாடி கொடுக்கிறார்கள்.

யுவன் இசையில் இமான், விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் பாடியிருக்கிறார்கள். இமான் இசையில் அனிருத் பாடியிருக்கிறார். தமன் இசையில் அனிருத் பாடியிருக்கிறார்.

இப்படி தொழில் ரீதியாக தங்களுக்குள் போட்டி இருந்தாலும் நட்பு முறையில் ஒருவர் இசையில் மற்றவர் பாடுவதில் எந்த போட்டியையும் அவர்கள் பார்ப்பதில்லை.

யுவன் ஷங்கர் ராஜா, மரியான் படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடி அந்தப் பாடல் சூப்பர் ஹிட்டாகியது. யுவனின் குரலில் ஒரு ஏக்கமும், வசீகரமும் கலந்திருக்கும். இப்போது ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு வேறொரு இசையைமப்பாளர் இசையில் பாடப் போகிறார்.

ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து நாயகனாக நடிக்கும் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தில் யுவன்ஷங்கர் ராஜா ஒரு பாடலைப் பாட உள்ளாராம். ஒரு பெப்பியான பாடலாக அந்தப் பாடல் வரப் போகிறது என ஜி.வி.பிரகாஷே தெரிவித்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் இசையில் யுவன் பாடப் போவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 


Post your comment





Related News
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
நேர் கொண்ட பார்வை படத்தின் புதிய அப்டேட்
சூர்யா 38 படத்தின் புதிய அப்டேட்
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
அஜித்தை கவர்ந்த படம்
எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்
காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions