ஆக்‌ஷன் படத்தில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ்

Bookmark and Share

ஆக்‌ஷன் படத்தில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ்

இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் ‘டார்லிங்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இது ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்றதால் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘பென்சில்’ படம் ரிலீசாகாமல் முடங்கி கிடக்கிறது.

இருந்தாலும், ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள், டிரைலர்கள் வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளதால், படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இதுவரை காதல், திரில்லர் படங்களில் நடித்த ஜி.வி.பிரகாஷ் தற்போது ஆக்‌ஷன் படத்தில் நடிக்க இருக்கிறார்.

‘திருடன் போலீஸ்’ படத்தை தயாரித்த கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் புது படம் ஒன்றை தயாரிக்க இருக்கிறது. இதில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.

இப்படத்தை பாண்டிராஜின் உதவியாளர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்க இருக்கிறார். இப்படம் ஆக்‌ஷன் திரில்லர் கலந்த காமெடி படமாக உருவாக இருக்கிறது. செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.


Post your comment





Related News
இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
நேர் கொண்ட பார்வை படத்தின் புதிய அப்டேட்
சூர்யா 38 படத்தின் புதிய அப்டேட்
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
அஜித்தை கவர்ந்த படம்
எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்
காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions