ஜி.வி.பிரகாஷ் படத்தை எதிர்பார்க்கும் மனிஷாயாதவ்!

Bookmark and Share

ஜி.வி.பிரகாஷ் படத்தை எதிர்பார்க்கும் மனிஷாயாதவ்!

பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் படத்தில் பள்ளி மாணவியாக நடித்தவர் மனீஷா யாதவ். அதன்பிறகு சுசீந்திரன் இயக்கத்தில் நடித்த ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம், பட்டையக்கிளப்பனும் பாண்டியா ஆகிய படங்களில் நடித்து ஓரளவு வளர்ந்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில், இடம்பொருள் ஏவல் படத்தில் புக்காகி சில நாட்கள் நடித்து வந்தபோது அப்பட டைரக்டர் சீனுராமசாமி மீது சில தவறான தகவல்களை சொல்லிக்கொண்டு அந்த படத்தில் இருந்தே வெளியேறினார் மனீஷா. விளைவு, அதன்பிறகு அவரை புக் பண்ண இருந்தவர்கள் பிரச்சினைக்குரிய நடிகையாக இருப்பார் போலிருக்கே என்று பின்வாங்கினர்.

இருப்பினும், கோலிவுட்டை விட்டு வெளியேறாமல் தீவிர படவேட்டையில் ஈடுபட்டிருந்த மனீஷா யாதவ், இப்போது த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, ஒரு குப்பை கதை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இதில் ஜி.வி.பிரகாசுடன் நடித்துள்ள த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தில் இன்னொரு நாயகியாக கயல் ஆனந்தியும் நடித்துள்ளார். என்றபோதும், மனீஷா யாதவுக்கு அழுத்தமான கதாபாத்திரமாம்.

அதனால் இந்த படத்திற்கு பிறகு தனது கேரியரில் திருப்பம் ஏற்படும் என்று கூறும் அவர், இனிமேல் கவர்ச்சி விசயத்தில் எந்தவித கட்டுப்பாடும் இல்லையாம். தங்குதடையின்றி தாராளம் காட்ட தயாராகி விட்டதாகவும் உரக்கச் சொல்கிறார்.


Post your comment





Related News
இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
நேர் கொண்ட பார்வை படத்தின் புதிய அப்டேட்
சூர்யா 38 படத்தின் புதிய அப்டேட்
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
அஜித்தை கவர்ந்த படம்
எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்
காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions