ஜி.வி.க்காக பெயரை மாற்ற உள்ள இயக்குநர்

Bookmark and Share

ஜி.வி.க்காக பெயரை மாற்ற உள்ள இயக்குநர்

டார்லிங் படத்தை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ள படம் த்ரிஷா இல்லனா நயன்தாரா  இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. சில் தினங்களுக்கு முன் இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது.  படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது.  

ஜி.வி.பிரகாஷ் குமார்  நடிகராக அறிமுகமான பென்சில் படம் இன்னும் வெளிவரவில்லை. தற்போதைய சூழலில் பென்சில் படத்தின் தயாரிப்பாளர் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி இருப்பதால் பென்சில் படம் வெளிவரவே வராது என்ற தகவல் அடிபடுகிறது.

எனவே பென்சில் படத்தை மறந்துவிட்டு அடுத்த படத்திற்கு ஆயத்தமாகிவிட்டார் ஜி.வி.பிரகாஷ் குமார். தனது நண்பர்களில் ஒருவரான ஷங்கர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்!  இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் உடன்  இரண்டு பிரபல இயக்குனர்கள் இணைந்து பணியாற்றுகிறார்கள். 

ஒருவர் இயக்குனர் வெற்றிமாறன்!  இன்னொருவர் இயக்குனர் அட்லி!  ஜி.வி. நடிப்பில் ஷங்கர் இயக்கும் இப்படத்திற்கு வெற்றிமாறன் திரைக்கதை அமைக்க, அட்லி வசனங்களை எழுதுகிறார்.  ஷங்கர் பெயரில் இன்னொரு இயக்குநர் வர முடியாது என்பதால் இந்தப் படத்தை இயக்கும் ஷங்கரின் பெயர் மாற்றப்பட உள்ளது.


Post your comment





Related News
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
அஜித்தை கவர்ந்த படம்
எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்
காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
மக்களவை தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாக போட்டி - நடிகர் பிரகாஷ்ராஜ்
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
கஜா புயல் பாதிப்பு களத்தில் ஜி.வி.பிரகாஷ் - விமல்
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions