ஜி.வி.பிரகாசுக்கு அட்வைஸ் செய்த நலம் விரும்பிகள்!

Bookmark and Share

ஜி.வி.பிரகாசுக்கு அட்வைஸ் செய்த நலம் விரும்பிகள்!

வெயில் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ்குமார், குறுகிய காலத்தில் 50 படங்களுக்கு இசையமைத்து விட்டார். அதோடு விஜய் போன்ற மாஸ் ஹீரோக்கள் மட்டுமின்றி, பாரதிராஜா, பாலா போன்ற முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கும் இசையமைத்து பேசப்படும் இசையமைப்பாளராகி விட்டார்.

ஆனால், திடீரென்று அவருக்குள் இருந்த நடிகன் விழித்துக்கொண்டதால் கடந்த ஆண்டில் இருந்து இசை, நடிப்பு என இருவழிப் பாதையில் பயணிக்கிறார். அந்த வகையில், அவர் நாயகனாக நடித்த டார்லிங் படம் வெளியாகி வெற்றியும் பெற்றது.

என்றபோதும், அந்த படத்தில் ஜி.வி.பிரகாஷை விட அவரைசுற்றி நின்றவர்களே அதிகமாக நடித்தனர். இதை ஜி.வி.பிரகாஷின் நலம் விரும்பிகள் சிலர், அவரிடம் நேரடியாகவே கூறியதோடு, இன்னும் நிறைய நடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்களாம்.

அதனால் ஏற்கனவே பென்சில் படத்தை டார்லிங்கிற்கு முன்பே முடித்து விட்ட அவர், தற்போது நடித்து வரும் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தில் யாரும் தனது நடிப்பை குறை சொல்லிவிடக்கூடாது என்பதற்காக நிறைய ஹோம் ஒர்க் செய்து நடிக்கிறாராம்.

முக்கியமாக, விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி ஹீரோக்கள் நடித்த படங்களில் இருந்தும் நிறைய டிப்ஸ்களை எடுத்து அதை தனது பாணியில் அவுட்புட் கொடுக்கிறாராம் ஜி.வி.பிரகாஷ்குமார்.


Post your comment





Related News
இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
நேர் கொண்ட பார்வை படத்தின் புதிய அப்டேட்
சூர்யா 38 படத்தின் புதிய அப்டேட்
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
அஜித்தை கவர்ந்த படம்
எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்
காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions