ஜி.வி.பிரகாஷ் படத்திலிருந்து விலகிய ராம்பாலா?

Bookmark and Share

ஜி.வி.பிரகாஷ் படத்திலிருந்து விலகிய ராம்பாலா?

சந்தானம் இயக்கத்தில் வெளிவந்த ‘தில்லுக்கு துட்டு’ படத்தை இயக்கியவர் ராம்பாலா. அப்படத்தை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷை வைத்து புதிய படம் ஒன்றை ராம்பாலா இயக்கப்போவதாக செய்திகள் வெளியானது. ஜி.வி.பிரகாஷ் தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதால், அப்படங்களை முடித்த பிறகு ராம்பாலா படத்தில் இணைவார் என்று கூறப்பட்டது. 

இந்நிலையில். ஜி.வி.பிரகாஷ் படத்தை இயக்குவதில் இருந்து ராம்பாலா பின்வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவர் எந்த காரணத்திற்காக அந்த படத்தில் இருந்து விலகினார் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை. ஜி.வி.பிரகாஷ் படத்தை இயக்குவதிலிருந்து திடீரென ராம்பாலா விலகியுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ‘புருஸ்லீ’ படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து ராஜீவ் மேனன் இயக்கும் புதிய படம், சசி இயக்கும் ‘அடங்காதே’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
சூர்யாதான் சூப்பர் ஸ்டார் – பிரபல நடிகையை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
திருமணத்துக்கு பின் ஆர்யாவுக்கு ஏன் இந்த வேலை - வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!
நேர் கொண்ட பார்வை படத்தின் புதிய அப்டேட்
சூர்யா 38 படத்தின் புதிய அப்டேட்
எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி
தமிழ் சினிமாவை இழுத்து மூடுங்கள் - வசந்த பாலன் ஆவேச பேச்சு
காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா
இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்
கஜா புயல் பாதிப்பு களத்தில் ஜி.வி.பிரகாஷ் - விமல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions