25 அனாதை குழந்தைகளை தத்தெடுத்த பின் மகிழ்ச்சி: ஹன்சிகா

Bookmark and Share

25 அனாதை குழந்தைகளை தத்தெடுத்த பின் மகிழ்ச்சி: ஹன்சிகா

25 அனாதை குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று ஹன்சிகா கூறினார். தனது ஒவ்வொரு பிறந்த நாளிலும் குழந்தைகளை ஹன்சிகா தத்தெடுக்கிறார். அவருக்கு தற்போது 23 வயது ஆகிறது. இதுவரை 25 குழந்தைகளை தத்தெடுத்து இருக்கிறார்.

இதுகுறித்து ஹன்சிகா கூறியதாவது:–

நான் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறேன். 25 அனாதை குழந்தைகளுக்கு அம்மாவாக இருக்கிறேன். இது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. சினிமாவில் பிசியாக நடிக்கிறேன். நிறைய மன உளைச்சல்களும் உள்ளன.

இதையெல்லாம் அந்த குழந்தைகளின் முகத்தை பார்த்து மறக்கிறேன். வாரம் ஒரு நாள் குழந்தைகளுக்காக ஒதுக்குகிறேன். அன்று குழந்தைகளுடனேயே இருக்கிறேன். அவர்களுடன் விளையாடுகிறேன். அவர்களுடனேயே சாப்பிடுகிறேன்.

சூட்டிங் கஷ்டங்களையெல்லாம் அவர்களுடன் இருக்கும் போது மறந்து விடுகிறேன்.நிறைய பொம்மைகள் வாங்கி கொடுப்பேன். அந்த பொம்மைகளை பார்த்து குழந்தைகள் கண்களில் தெரியும் மகிழ்ச்சியில் மெய்மறந்து போகிறேன்.

ஆதரவற்ற குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் இல்லம் கட்ட வேண்டும் என்பது எனது லட்சியம். இதற்காக மும்பை புறநகர் பகுதியில் இடம் வாங்கி போட்டுள்ளேன். விரைவில் அந்த இல்லத்தை கட்டி குழந்தைகளை அங்கு தங்க வைப்பேன்.

இவ்வாறு ஹன்சிகா கூறினார்.


Post your comment





Related News
மீண்டும் ஹன்சிகாவுடன் இணைந்த சிம்பு
நான் மீண்டும் சிம்புவுடன் இணைந்துவிட்டேன்- போட்டோவுடன் அவரின் முன்னாள் காதலி போட்ட பதிவு
சண்டைக்காட்சியில் காயமடைந்த ஹன்சிகா
சர்ச்சைக்கு நடுவே அடுத்த போஸ்டரை வெளியிட்ட மஹா படக்குழு
படப்பிடிப்பில் படுகாயம் அடைந்த நடிகை தன்ஷிகா
மஹா படத்தின் மூலம் புதிய மைல்கல்லை தொட்ட ஹன்சிகா, ஜிப்ரான்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
நான் இடிந்து போகும் ஆள் இல்லை - ஹன்சிகா
ஹன்சிகா புதிய படத்தின் தலைப்பு "மஹா"..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions