படத்துக்காக நிஜமாலுமே மொட்டையடித்த ஹரிகுமார்!

Bookmark and Share

படத்துக்காக நிஜமாலுமே மொட்டையடித்த ஹரிகுமார்!

தூத்துக்குடி ஹரிகுமார் அதன்பிறகு திருத்தம், மதுரை சம்பவம், போடிநாயக்கனூர் கணேசன், சங்கராபுரம் ஆகிய படங்களில நடித்தார். இதில் சங்கராபுரம் படம் மட்டும் இன்னும் திரைக்கு வரவில்லை.

ஆனபோதும் அதற்கடுத்து மோடிமஸ்தான் என்ற படத்தை இயக்கி நடித்த ஹரிகுமார், சில நாட்கள் படப்பிடிப்போடு அப்படத்தை கிடப்பில் போட்டு விட்டார். இந்த நிலையில், தற்போது காதல் அகதீ என்றொரு படத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படத்தில் ரொமான்டிக் லவ் சப்ஜெக்ட்டில் அவர் நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுபற்றி ஹரிகுமார் கூறும்போது, இந்த படம் காதல் கதையில்தான் உருவாகியிருக்கிறது.

ஆனால் உருகி உருகி காதலிக்கும் காட்சிகளை விட ஆத்மார்த்தமாக காதலிக்கும் கதையில் உருவாகியிருக்கிறது. மேலும், இந்த படத்துக்காக மொட்டையடித்து சாமியாடும் ஒரு காட்சியில் நடித்திருக்கிறேன்.

அதற்காக நிஜமாலுமே மொட்டையடித்து நடித்தேன். யதார்த்தம் வேண்டும் என்பதற்காக இப்படி செய்ததாக சொல்லும் ஹரிகுமார், இந்த படம் இதுவரை ஹரிகுமார் என்றாலே ஆக்சன் கோணத்தில் பார்த்தவர்களுக்கு இவரை வித்தியாசமான கதைகளிலும் நடிக்க வைக்கலாம் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தும் என்கிறார்.

 


Post your comment





Related News
விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இடத்தை பிடித்த ஹரிஷ் கல்யாண்!
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
அஜித்தை கவர்ந்த படம்
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்
சூர்யா - ஹரி இணையும் படத்தின் தலைப்பு இதுவா?
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
கேரள அரசு சார்பில் பி.சுசீலாவுக்கு அரிவராசனம் விருது
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions