பாரதியாரை இதை கேவலப்படுத்த முடியாது ஹிப் ஹாப் ஆதி!!

Bookmark and Share

பாரதியாரை இதை கேவலப்படுத்த முடியாது ஹிப் ஹாப் ஆதி!!

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி இருபது ஆண்டுகள் தமிழ் சினிமாவிற்கு படைப்பு ரீதியாகவும், வணிக அடிப்படையிலும் பொற்காலம் என்பார்கள் தமிழ் சினிமா துறையினர்.

1982 ஜூன் மாதம் 11ம் நாள் ரகுவரன் - ரத்னா நடிப்பில் ஹரிஹரன் இயக்கத்தில் பாளை சண்முகம் தயாரித்த ஏழாவது மனிதன் ரீலீஸ் ஆனது. அன்று மதுரை கல்பனா தியேட்டரில் முதல் காட்சி படம் முடிந்து வெளியில் வந்து கொண்டிருந்தோம். ஒரு ரிக்க்ஷா ஓட்டுநர், "படம் நல்லா இருக்கு பாட்டு தான் ரொம்ப பழசா இருக்கு" என்றார். கதை பழசு, சீன் பழசு என கமெண்ட் வரும்... ஆனால் பாடல் பழசு என்று கமெண்ட் காரணம், ஏழாவது மனிதன் படத்தில் 11 பாரதியார் பாடல்கள் எல் வைத்யநாதன் இசையில் சேர்க்கப்பட்டிருந்தன. பாடல்களை அன்றைய பிரபல பாடகர்கள் பாலசுப்ரமணியம், யேசுதாஸ் பாடியிருந்தனர்.

பாரதியார் பாடல்கள் பள்ளி, கல்லூரி, பொது மேடைகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தன. பாரதியார் பாடல்கள் பல்வேறு வணிக ரீதியான படங்களில் கெளரவமாக, சமூக நோக்கத்துடன் பயன்படுத்தி தேசியக் கவிஞன் பாரதியாருக்கு பெருமை சேர்த்திருக்கின்றனர் தமிழ் சினிமாவின் இயக்குநர்களும், இசையமைப்பாளர்களும், இத்தனை காலமும்.

ஆனால் விரைவில் வெளிவர உள்ளக கவண் என்ற படத்தில் அந்த மகாகவியை முடிந்தவரை கேவலப்படுத்தியுள்ளனர்.

"தீராத விளையாட்டுப் பிள்ளை..." என்ற பாரதியாரின் குழந்தைப் பாடலை ஆபாச குத்து டான்சுக்கு பயன்படுத்தி உள்ளனர். தமிழகத்தில் நடந்த ஜல்லிகட்டு போராட்டத்தை திசை திருப்பும் விதமாக கருத்து சொல்லி அரசின் கைக் கூலியாக மாறிவிட்டார் என குற்றம்சாட்டப்பட்ட ஹிப் ஆப் தமிழன்தான் இந்த பாடலுக்கு இசை அமைத்துள்ளார்.

இந்த லட்சணத்தில் பாரதியார் பாடலை இன்றைய இளைய சமூகத்திடம் கவண் படத்தின் மூலம் கொண்டு செல்ல கடுமையாக உழைத்ததாக தம்பட்டம் வேறு அடித்தார் தமிழன். அதற்கு 'குத்து தமிழ்' பேசும் டி ராஜேந்தர் வக்காலத்து வாங்கி, வழிமொழிந்து பேசியது அவமானகரமானது. விஜய் சேதுபதி, நாசர், ராஜேந்தர் போன்ற பண்பட்ட நடிகர்கள் நடித்துள்ள 'கவண்', படத்தை நல்ல இயக்குநர் எனப் பெயர் எடுத்த கே.வி.ஆனந்த் இயக்கி உள்ளார். தமிழ் கவிஞர்கள் ஆதர்ச நாயகனாக வணங்கிப் போற்றி வரும் பாரதியாரின் பாடலை விஜய் சேதுபதி, டி ராஜேந்தர், படத்தின் நாயகி மடோனா ஆகியோர் கவர்ச்சி உடையில், ஆடும் நடனத்துக்கு பயன்படுத்தி இருப்பது தமிழ் சமூகத்தை அவமானப்படுத்துவதற்கு ஒப்பானது.

கழுதைக்கு கற்பூர வாசனை தெரியாது என்பார்கள். அது போல் இசையமைப்பாளன் ஹிப் ஆப் தமிழன் பாரதியின் பெருமை தெரியாதவராக இருக்கலாம். விஜய் சேதுபதி, தமிழ் உணர்வாளன் என அடுக்கு மொழி பேசும் ராஜேந்தர் போன்றவர்கள் பாரதியாரின் பாடலை கொச்சைபடுத்தும் குத்து பாடலுக்கு நடனமாடியது நியாயம்தானா? என்ற கண்டன குரல்கள் எழ தொடங்கியுள்ளன.

இந்த அசிங்கத்தை கவண் படத்தில் இருந்து நீக்காவிட்டால், பாரதியின் ரசிகர்கள், கவிஞர்கள் சட்ட ரீதியான நடவடிக்கையில் ஈடுபட தயாராகி வருகின்றனர்.


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions