தனியார் நிறுவனங்களுக்கு இளையராஜா பாடல்களை பயன்படுத்த விதித்த தடையை நீக்க முடியாது

Bookmark and Share

தனியார் நிறுவனங்களுக்கு இளையராஜா பாடல்களை பயன்படுத்த விதித்த தடையை நீக்க முடியாது

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் இளையராஜா சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார்.

அதில் "எனது பாடல்களை ஒலிபரப்ப யாருக்கும் நான் அனுமதி வழங்கவில்லை. ஆனால் என்னுடைய அறியாமையை பயன்படுத்தி அகி மியூசிக் நிறுவனம், எக்கோ ரிக்கார்டிங் கம்பெனி, யுனிசிஸ் இன்போ சொல்யூஷன், மும்மை டிரேடிங் ஆகிய நிறுவனங்கள் என் பாடல்களை ஒலிபரப்பியும்,  மூன்றாவது நபர்களுக்கு விற்பனை செய்தும் வருகின்றன.

இதற்கு தடைவிதிக்க வேண்டும்" என்று தனது வழக்கில் தெரிவித்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மேற்கண்ட நிறுவனங்கள் இளையராஜாவின் பாடல்களை எந்த ரூபத்திலும் பயன்படுத்த நிரந்தர தடைவிதித்தது என்றாலும் வழக்கு தொடர்ந்து நடந்து வந்த்து.

இந்த தடையை எதிர்த்து அந்த நிறுவனங்கள் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப்பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு இந்த வழக்கில் தனிநீதிபதி விதித்த தடையை நீக்க முடியாது. பிரதான வழக்கை தனிநீதிபதி விரைவாக விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும், பிரதான வழக்கின் சாட்சிகளை பதிவு செய்யும் பணியை மாஸ்டர் நீதிமன்றம் மூன்று மாதத்தில் முடித்து அதனை தனி நீதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டும். என்று உத்தரவிட்டது.


Post your comment

Related News
ராயல்டி உரிமை தயாரிப்பாளர்களுக்கே சொந்தம்: ஸ்.ஏ.சந்திரசேகரன் விளக்கம்!
நான் எதிர்பார்த்த பாடல் அமையவே இல்லை - இளையராஜா
இசையமைப்பாளர்களுக்கு அறிவுரை வழங்கிய இளையராஜா
இசைஞானியின் குரல்வளத்துடன் வர்ஷன் பாடிய அம்மா இரங்கல் பாடல்
உடல் நலக்குறைவால்இளையராஜா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
எம்.எஸ்.விஸ்நாதன் பற்றி பிரபலங்கள் தெரிவித்த கருத்துக்கள்
\'ருத்ரமாதேவி\' டிரைலர் வெளியீடு - மிரட்டும் இளையராஜாவின் இசை!
புண்யகோடி... இளையராஜா இசையில் உருவாகும் சமஸ்கிருத அனிமேஷன் படம்
நான் படம் தயாரிப்பதாக வந்த செய்தியில் உண்மையில்லை- இளையராஜா விளக்கம்
இளையராஜா கச்சேரி என்று சொல்லி வெளிநாட்டில் வசூல் மோசடி!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions