ராயல்டி உரிமை தயாரிப்பாளர்களுக்கே சொந்தம்: ஸ்.ஏ.சந்திரசேகரன் விளக்கம்!

Bookmark and Share

ராயல்டி உரிமை தயாரிப்பாளர்களுக்கே சொந்தம்: ஸ்.ஏ.சந்திரசேகரன் விளக்கம்!

நேற்று குமரிமாவட்டம் அரு மனையில் கிறிஸ்மஸ் மத நல்லிணக்க விழா நடைபெற்றது. அதில் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசிய போது..... எல்லோருக்கும் மத நம்பிக்கை வேண்டும். ஒவ்வொருடைய செயல்பாடுகளிலும் , முடிவுகளிலும் அன்பு ஒன்றே பிரதானமாக இருக்க வேண்டும். 

எல்லா  மதங்களிலும் பிறர் மீது அன்பு செலுத்த வேண்டும் என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தியாவில் இந்து,முஸ்லீம், கிருஸ்தவம் ஒற்றுமையுடன் வாழ்கிறோம் என்றால் நமது முன்னோர்கள் சகிப்பு தன்மை என்ற விதையை ஊன்றி சென்றிருக்கிறார்கள்.அதனால் தான் மத வேற்றுமை இல்லாமல் சகோதரர்களாக வாழ்ந்து வருகிறோம். 

நானும் சரி,விஜய்யும் சரி, எல்லோரும் ஓர் மதம், எல்லோரும் ஓர் இனம் என்டர் அடிப்படையில் தான் வாழ்ந்து வருகின்றோம்.  அதையே மற்றவர்களையும்  கடைபிடிக்க செய்கிறோம். ஜாதி, மதத்தின் பெயரால் இனி ஒரு பிரிவினை நமக்குள் வந்து விட கூடாது. நம்முடைய ஒற்றுமையே உலக நாடுகளுக்கு ஓரு  எடுத்துக்காட்டாகும்.

எந்த ஒரு மனிதனாலும் வெற்றி பெற முடியும் .  அவனுக்குள் தன்னம்பிக்கையும், உழைப்பும் இரண்டும் இருந்தால். நான் இயக்குனர் தொழிலில் வெற்றி பெற்ற பொது விஜய்யை ஒரு டாக்டராக்கி பெரிய மருத்துவமனை கட்டி கொடுக்க வேண்டும், அதில் கேன்சர் நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கவேண்டும் என்ற  எண்ணம் எனக்குள் இருந்தது. 

ஆனால்  விஜய்யோ நடிகராக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக  இருந்தான். ஒரு தந்தையாக சில படங்கள் தயாரித்து இயக்கி, நான் ஒரு பாதையை போட்டு கொடுத்தேன். அவன் தனது கடின உழைப்பால் உச்ச இடத்திற்கு வந்திருக்கிறார். 

அதற்கு காரணம் விஜய்யின் தன்னம்பிக்கையும், கடின உழைப்பும் தான். நான் விஜய்யின் வரவுக்கு முன்னரே பெரிய இயக்குனர்.  நான் விழாக்களுக்கு செல்லும் போது டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் செல்கிறார் என்று பலரும் சொல்வார்கள். 

ஆனால் இன்று விழாக்களுக்கு செல்லும் போது விஜய்யின் தந்தை செல்கிறார் என்று சொல்கிறார்கள்.  இதை விட ஒரு தந்தைக்கு என்ன பெருமை இருக்க முடியும். நான் இளைய சமுதாயத்தை கேட்பது ஒன்றே ஓன்று தான். 

இவருடைய மகன் போகிறான் என்று சொல்வதை விட இன்னாருடைய அப்பா போகிறார் என்று சொல்லும் அளவுக்கு நீங்கள் நடந்து கொள்ளுங்கள். இதை விட ஒரு பெரிய உதவி உங்கள் தாய் தந்தைக்கு எதுவும் இருக்காது.  கடினமாக நீங்கள் உழைக்க கற்று கொள்ளுங்கள். 

உலகத்திலேயே உயர்ந்த தெய்வம் தாய்.  என்னை பொறுத்தவரை மண்ணில் உலவும் தெய்வம் தாய் என்று தான் சொல்வேன். 25  வருடங்கள் என் தாயை என் கூட வைத்து தான் மகாராணி போல வாழ வைத்தேன். 

என் தாயை சந்தோசமாக வைத்ததால் நானும் விஜய்யும் இந்தளவுக்கு இருக்கிறோம்.  ஒவ்வொருவரும் தாயை சந்தோசப்படுத்துக்கள்.  தாயை சந்தோசபடுத்துகிற எவனும் தோற்றுப்போக மாட்டான். இளையராஜாவின் பாடல் ராயல்டி தயாரிப்பாளர்களுக்கே சொந்தம்

இளையராஜாவின் பாடல் ராயல்டி பற்றி நிருபர்கள் கேட்டபோது எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறியதாவது .... ஒரு கட்டடம் கட்டும் பொது என்ஜினீயர், மேஸ்த்ரி , கொத்தனார், கையாள், கார்பெண்டர், பெயிண்டர், என பலரும் சேர்ந்து தான் ஓர் வீட்டை உருவாக்குவார்கள்.

அந்த வீட்டு  வேலை முடிந்தவுடன் அந்த வீட்டின் உரிமையாளருக்கு அந்த உரிமை சேருமே  தவிர மற்ற யாரும் அந்த உரிமை கொண்டாட முடியாது. இது எல்லா தொழிலுக்கும் பொருந்தும். 

ஒரு படம் தயாரிப்பது என்பது கடினமான தொழில், வீட்டை விற்று, நிலத்தை விற்று, பல அவமானங்களை சந்தித்து தான் படங்களை தயாரிக்கிறார்கள்.  இதில் துரதிஷ்டம் என்னவென்றால் அதிக சதவிகித படங்கள்  தோல்வி அடைந்து விடுகிறது.  அத்தனை இன்னல்களையும் சந்திக்கும் தயாரிப்பாளர்களுக்கு தான் அந்த உரிமை சென்றடைய வேண்டும். 

ஒரு படத்தில் பணிபுரியும் இயக்குனர், ஒளிப்பதிவாளர், சண்டை இயக்குனர், கலை இயக்குனர், நடிகர், நடிகைகள், எல்லோரும் சம்பளம் வாங்கி கொண்டு வேலை செய்கிறார்கள்.  இவர்கள் யாருமே ராயல்டி கேட்பதில்லை.

அதை  போல தான் இசையமைப்பாளரும் கேட்பது தவறு. அவருடைய வேலைக்கு என்ன சம்பளமோ அதை வாங்கி விடுகின்றனர்.  எனவே அந்த பாடல்களின் உரிமை தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே சொந்தமாக இருக்கவேண்டும். 

எனவே  தயாரிப்பாளர்கள் இந்த ராயல்டியை பெற ஓற்றுமையுடன்  செயல்பட வேண்டும் என எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறினார்.    


Post your comment

Related News
அதைத்தான் எனக்கு நானே கேட்டுகிறேன் - அஜித் குறித்து நெகிழ்ந்த பிரபலம்!
ஹாலிவுட் பட வாய்ப்பு போனா என்ன? வேற ரூட்டில் களமிறங்கிய சித்தார்த்!
மீண்டும் லீக்கான தர்பார் புகைப்படம் - ஸ்டைலா, கெத்தா அசத்தும் ரஜினி!
சிவகார்த்திகேயனுக்காக விஜய் சேதுபதியை கைவிட்ட பிரபல நடிகை!
தடைகளைக் கடந்து வெளியாகும் சிந்துபாத் - அதுவும் எப்ப தெரியுமா?
மணிரத்னத்தின் அடுத்த நாயகி இவர்தான் - வைரலாகும் செல்ஃபி புகைப்படம்!
என்.ஜி.கே படத்தின் மொத்த வசூல் இவ்வளவுதான் - படக்குழுவின் பொய்யை நம்ப வேண்டாம்!
அனல் பறக்கும் பிகில் வியாபாரம் - தளபதி ஆட்டம் ஆரம்பம்!
காப்பான் குறித்த இன்னொரு சூப்பர் அப்டேட் - ரெடியா சூர்யா ஃபேன்ஸ்?
சூர்யா படத்தில் ஹீரோயினா நடிக்கணுமா? ரசிகைகளுக்கு சூப்பர் வாய்ப்பு!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions