பின்னணியை - முன்னணியாக கொடுத்த இளையராஜா

Bookmark and Share

பின்னணியை - முன்னணியாக கொடுத்த இளையராஜா

பொதுவாக திரைப்படங்களுக்கு பின்னணி இசை அமைப்பது என்பதுதான் நடைமுறையில் இருந்து வருகிற ஒன்று. அதாவது இயக்குனர்கள் முழு படத்தையும் எடுத்து இசை அமைப்பாளர் கையில் கொடுத்து விடுவார்கள். அதை பார்த்து கதையின், காட்சியின் ஃபீலிங்கை உள்வாங்கிக் கொண்டு இசை அமைப்பாளர்கள் பின்னணி இசை அமைப்பார்கள்.

பாடல்களை மட்டும் முன்னமே கொடுத்து விடுவார்கள். அதை வைத்து பாடல் காட்சிகள் எடுத்து வருவார்கள்.இப்போது முதன் முறையாக பாலா இயக்கும் தாரை தப்பட்டை படத்துக்கு இளையராஜா முன்னணி இசை அமைத்துக் கொடுத்திருக்கிறார்.

முழு கதையும், காட்சிகள் பற்றியும், அந்த காட்சிகளை பாலா எப்படி படமாக்குவார் என்பதை பற்றியும் முழுமையாக அறிந்துள்ள இளையராஜா சில முக்கிய காட்சிகளை கற்பனையிலேயே ஓட்டிப்பார்த்து அதற்கு பின்னணி இசை அமைத்துக் கொடுத்திருக்கிறார்.

பாடல்களை ஒலிக்கவிட்டு பாடல் காட்சிகளை படமாக்குவதுபோல முக்கியமான காட்சிகளின் பின்னணி இசையை ஒலிக்க விட்டு அந்த காட்சியை படமாக்கும் புதிய முறை இது.

தஞ்சையில் நடந்து வரும் தாரை தப்பட்டை படத்தின் படப்பிடிப்பில் வில்லனால் துன்புறுத்தப்படும் வரலட்சுமி. அவன் கொடுமையின் வலிதாங்காமல் தனிமையில் அமர்ந்து அழுகிற காட்சிக்கு இளையராஜாவின் முன்னணி இசை அமைத்துக் கொடுத்திருந்தார். அது ஒலிக்கப்பட்டு படமாக்கப்பட்டபோது.

வரலட்சுமி மட்டுமல்ல டெக்னீஷியன்களுமே உருகி கண்ணீர் விட்டார்களாம். நடிப்பதற்கும் எளிமையாக இருந்ததாம். எந்த படப்பிடிப்பு தளத்திற்கும் இதுவரை நேரில் சென்றிராத இளையராஜா தஞ்சையில் நடந்த தாரை தப்பட்டை படப்பிடிப்புக்கு நேரில் சென்றது. இந்த புதிய முயற்சி எப்படி சாத்தியமாகிறது என்பதை பார்ப்பதற்குத்தானாம்.


Post your comment





Related News
எப்போதும் ரசிகன் - இளையராஜாவுக்கு 96 இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா பதில்
நந்தாவும், ரமணாவும் என்னை அவமானப்படுத்தினார்கள் - பார்த்திபன் பரபரப்பு பேட்டி
தயாரிப்பாளர்களின் காப்புரிமையில் தலையிட இளையராஜாவுக்கு தடை - தயாரிப்பாளர்கள் வழக்கு
என் பாடலில் எனக்கு பங்கு இல்லையா? - ராயல்டி கோரி இளையராஜா வெளியிட்ட வீடியோ
பாடல் காப்புரிமை சம்பந்தப்பட்ட வழக்கு - இளையராஜா மீண்டும் எச்சரிக்கை
திருப்பதி ஏழுமலையானை தரிசித்த இளையராஜா: ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து பேச மறுப்பு
இளையராஜா பாடலை மறு உருவாக்கம் செய்த செந்தில் குமரன்
இசை உலகம் சிதைந்துவிட்டது: இளையராஜா
முதன்முறையாக இளையராஜாவுடன் இணைந்து இசையமைக்கும் யுவன்
இலங்கை செல்ல ரஜினியை தடுத்த அரசியல்வாதிகள் இப்போது இந்த இசையமைப்பாளரை தடுப்பார்களா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions