தலைமுறை தாண்டி பகையை தொடரும் இளைராஜா

Bookmark and Share

தலைமுறை தாண்டி பகையை தொடரும் இளைராஜா

இளையராஜா, பாரதிராஜா, வைரமுத்து மூவரும் ஒரே காலகட்டத்தில் சினிமாவுக்கு வந்து பல சாதனைகளை படைத்தவர்கள். மூவரின் கூட்டணியில் தமிழ் சினிமாவுக்கு அற்புதமான படைப்புகள் கிடைத்தது.

ஆனால் திடீர் புகழ், பணம் இவர்களுக்குள் ஈகோவை வளர்த்தது. சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் பெரிதாகி பிரிவினையில் முடிந்தது. இளையராஜாவும், வைரமுத்துவும் இணைந்து பணியாற்றி 20 வருடங்களுக்கு மேலாகிவிட்டது.

காலம் மாறிவிட்டது. அடுத்த தலைமுறை சினிமாவிற்கு வந்து விட்டார்கள். ஆனால் இளையராஜா வைரமுத்து மீது கொண்டுள்ள பகை மட்டும் மாறவில்லை. சந்தர்ப்பம் அமையும் போதெல்லாம் வைரமுத்துவை கடுமையாக விமர்சித்து பேசுவார் இளையராஜா.

ஆனால் அடுத்த தலைமுறை நட்போடு இருக்க விரும்புகிறது. இடம் பொருள் ஏவல் படத்தில் வைரமுத்துவின் பாடல்களுக்கு இளையராஜாவின் மகன் யுவன் இசை அமைக்கிறார்.

தலைமுறைகள் இறங்கி வந்தாலும் இளையராஜா இறங்கி வரவில்லை. உன் சமையல் அறையில் படத்திற்கு மதன் கார்க்கி பாட்டு எழுதுவதை அறிந்து இசை அமைக்க மறுத்தார் இளையராஜா.

வேறு வழியில்லாமல் பிரகாஷ்ராஜ் மதன் கார்க்கி பாடல் எழுதுவதை தவிர்த்தார். பாகுபாலி படத்திற்கு வசனம் எழுதி வரும் மதன் கார்க்கியை ருத்ரமாதேவி படத்திற்கும் எழுதச் சொன்னார்கள்.

இதை கேள்விப்பட்ட இளையராஜா அவன் வசனம் எழுதினால் நான் படத்திலிருந்து விலகிக் கொள்கிறேன் என்று கூறிவிட்டார். இளைதலைமுறை வேறுபாடுகளை மறந்த ஒன்றாக வாழ நினைத்தாலும் இளையராஜா இறங்கி வர மறுக்கிறார். காலத்தால் ஆற்ற முடியாத அளவிற்கு அப்படி என்ன பகையோ இருவருக்கும்.


Post your comment

Related News
எப்போதும் ரசிகன் - இளையராஜாவுக்கு 96 இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா பதில்
நந்தாவும், ரமணாவும் என்னை அவமானப்படுத்தினார்கள் - பார்த்திபன் பரபரப்பு பேட்டி
தயாரிப்பாளர்களின் காப்புரிமையில் தலையிட இளையராஜாவுக்கு தடை - தயாரிப்பாளர்கள் வழக்கு
என் பாடலில் எனக்கு பங்கு இல்லையா? - ராயல்டி கோரி இளையராஜா வெளியிட்ட வீடியோ
பாடல் காப்புரிமை சம்பந்தப்பட்ட வழக்கு - இளையராஜா மீண்டும் எச்சரிக்கை
திருப்பதி ஏழுமலையானை தரிசித்த இளையராஜா: ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து பேச மறுப்பு
இளையராஜா பாடலை மறு உருவாக்கம் செய்த செந்தில் குமரன்
இசை உலகம் சிதைந்துவிட்டது: இளையராஜா
முதன்முறையாக இளையராஜாவுடன் இணைந்து இசையமைக்கும் யுவன்
இலங்கை செல்ல ரஜினியை தடுத்த அரசியல்வாதிகள் இப்போது இந்த இசையமைப்பாளரை தடுப்பார்களா?
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions