இளையராஜா பாடலை மறு உருவாக்கம் செய்த செந்தில் குமரன்

Bookmark and Share

இளையராஜா பாடலை மறு உருவாக்கம் செய்த செந்தில் குமரன்

தமிழ் மொழி மீதும், பாட்டு பாடுவதில் ஆர்வம் கொண்ட செந்தில் குமரன், 2003ம் ஆண்டு முதல் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். மேலும் இவர் மின்னல் மியூசிக் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இந்த யூடியூப் சேனலில் பல தமிழ் பாடலை மறு உருவாக்கம் செய்து வெளியிட்டு வருகிறார். 

இப்படி இவர் வெளியிட்டுள்ள பல பாடல்களை உலகமெங்கும் உள்ள இசை ரசிகர்கள் பார்த்தும், பாராட்டியும் வருகின்றனர். குறிப்பாக பிரபல முன்னணி இசையமைப்பாளர்களும் பாராட்டியுள்ளனர். 

இந்நிலையில், வாலியின் வரிகளில் இளையராஜாவின் இசையில் ‘நான் கடவுள்’ படத்தில் இடம் பெற்ற ‘ஓம் சிவோஹம்...’ என்ற பாடலை மறு உருவாக்கம் செய்து வெளியிட்டுள்ளார். தனது இசை குழுவினருடன் பிரமாண்டமான அரங்கில், தனக்கே உரிய தனித்திறமையால் அந்த பாடலை அற்புதமாக பாடி பதிவு செய்திருக்கிறார். தற்போது இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு வருகிறது.


Post your comment





Related News
எப்போதும் ரசிகன் - இளையராஜாவுக்கு 96 இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா பதில்
நந்தாவும், ரமணாவும் என்னை அவமானப்படுத்தினார்கள் - பார்த்திபன் பரபரப்பு பேட்டி
தயாரிப்பாளர்களின் காப்புரிமையில் தலையிட இளையராஜாவுக்கு தடை - தயாரிப்பாளர்கள் வழக்கு
என் பாடலில் எனக்கு பங்கு இல்லையா? - ராயல்டி கோரி இளையராஜா வெளியிட்ட வீடியோ
பாடல் காப்புரிமை சம்பந்தப்பட்ட வழக்கு - இளையராஜா மீண்டும் எச்சரிக்கை
திருப்பதி ஏழுமலையானை தரிசித்த இளையராஜா: ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து பேச மறுப்பு
இசை உலகம் சிதைந்துவிட்டது: இளையராஜா
முதன்முறையாக இளையராஜாவுடன் இணைந்து இசையமைக்கும் யுவன்
இலங்கை செல்ல ரஜினியை தடுத்த அரசியல்வாதிகள் இப்போது இந்த இசையமைப்பாளரை தடுப்பார்களா?
இளையராஜாவுடன் இணைவேன், ஆனால்- மணிரத்னம் ஓபன் டாக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions