கௌதம் படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா

Bookmark and Share

கௌதம் படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா

மணிரத்னம் இயக்கிய ‘கடல்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இப்படம் சரியான வெற்றி பெறாத நிலையில், அடுத்தடுத்து ‘என்னமோ ஏதோ’, ‘வை ராஜா வை’ அகிய படங்கள் வெளியாகி தோல்வியை தழுவியது.

தற்போது ‘இந்திரஜித்’, ‘ரங்கூன்’, ‘சிப்பாய்’ ஆகிய படங்கள் கைவசம் வைத்துள்ளார். இப்படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இவர் அடுத்ததாக ‘முத்துராமலிங்கம்’ என்னும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கவுள்ளார்.

இவர் இசையமைக்கப்போகும் 1001-வது படமாகும். இளையராஜாவின் 1000-மாவது படமான ‘தாரைதப்பட்டை’ படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

‘முத்துராமலிங்கம்’ படத்தை குளோபல் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் விஜய் பிரகாஷ் தயாரிக்கிறார். ராஜதுரை என்பவர் இயக்க இருக்கிறார்.


Post your comment





Related News
இந்தியன் 2 டிராப்; இளம் நடிகர்களுடன் கைக்கோக்கும் ஷங்கர் – என்ன கொடுமை சார் இது?
தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் டான் கீ (DON KEY)
நாளை மோதி கொள்ளும் 5 படங்கள் – ஜெயிக்க போவது யார்?
90 ML: ச்சீச்சீன்னு சொல்லிக்கிட்டே இந்த படத்தை தான் நிறைய பேர் பார்த்திருக்காங்க போல!
பூஜையுடன் தொடங்கிய தனுஷின் புதிய படம்!
விஷாலின் அயோக்யா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சூர்யாவின் அடுத்த இயக்குனர் இவரே – சத்தமில்லாமல் வெளியான சூர்யா 38
அஜித்தின் அடுத்தப்படம் குறித்து ஆங்கில பத்திரிக்கையில் வந்த அப்டேட்!
என் பாடலில் எனக்கு பங்கு இல்லையா? - ராயல்டி கோரி இளையராஜா வெளியிட்ட வீடியோ
தமிழில் முதல் ஸ்பேஸ் படம் டிக் டிக் டிக் இல்லை, அதற்கு முன்பே வெளிவந்த தமிழ் ஸ்பேஸ் படம், இதோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions