இமான் அண்ணாச்சி பற்றி கோலிவுட்டில் பரவும் வதந்தி!

Bookmark and Share

இமான் அண்ணாச்சி பற்றி கோலிவுட்டில் பரவும் வதந்தி!

நீர்ப்பறவை, மரியான், ஜில்லா, கோலிசோடா, காக்கி சட்டை என பல படங்களில் நடித்தவர் இமான் அண்ணாச்சி. திருநெல்வேலி தமிழ் பேசுவதுதான் இவரது அடையாளமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் காமெடியில் தனக்கென ஒரு இடத்தை கைப்பற்றி விட்ட இமான் அண்ணாச்சி, தற்போது விஜய்யின் புலி, தனுஷை வைத்து பிரபுசாலமன் இயக்கும் படம் என பரவலாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், இமான் அண்ணாச்சியின் மார்க்கெட் உச்சத்தில் இருப்பதால் அவர் ஒரு நாளைக்கு 5 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குவதாக கோலிவுட்டில் தற்போது ஒரு செய்தி பரவிக்கொண்டிருக்கிறது.

ஆனால் இந்த செய்தி குறித்து இமான் அண்ணாச்சியிடம் கேட்டால், எனக்கு ஒருநாள் சம்பளம் 5 லட்சமா, யார் தர்றாங்க? என்று கேட்டு அதிர்ச்சியடைகிறார். அதோடு, இதுவரை நான் எந்த படத்தில் நடிக்கவும் இந்த மாதிரி சம்பளம் கேட்டதில்லை.

ஒரேயொரு ரியல் எஸ்டேட் விளம்பரத்தில் நடிக்கத்தான் ஐந்து லட்சம் வாங்கியிருக்கிறேன். படங்களுக்கு வாங்கியதில்லை. மேலும், சினிமாவைப்பொறுத்தவரை நடிக்கிற கேரக்டர்தான் எனக்கு முக்கியம். சம்பளம் அதற்கு அப்புறம்தான். நான் ஒரு நாளைக்கு 5 லட்சம் சம்பளம் வாங்குவதாக பரவியிருக்கும் செய்தி உண்மையில்லை. அது வெறும் வதந்தி மட்டுமே என்கிறார் இமான் அண்ணாச்சி.


Post your comment





Related News
கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்
விசுவாசம் படத்தில் அஜித்துக்காக பாடியிருக்கும் பிரபல நடிகர்! இவர் அனைவருக்கும் பிடித்தவர்
நாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'தீதும் நன்றும்'..!
அடேயப்பா சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ பாப்பாவுக்கு இப்படி ஒரு ஆசையாம்! கேட்டால் அசந்தே போவீர்கள்
கடைக்குட்டி சிங்கத்தில்" ஜொலிக்கும் சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ மற்றும் தேஜ் !
‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்
என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடிக்கும் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'
தம்பி ராமய்யா இசையில் பாடிய பிரபல இசையமைப்பாளர்
அஜித்தை சந்தித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இமான்
ராக்ஸ்டார் ரமணியம்மாவாள் கண்ணீர் விட்டு அழுத டி.இமான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions