இந்தியன் 2 படத்தில் இப்படியொரு மாற்றமா? என்ன செய்ய போகிறார் ஷங்கர்?

Bookmark and Share

இந்தியன் 2 படத்தில் இப்படியொரு மாற்றமா? என்ன செய்ய போகிறார் ஷங்கர்?

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் 1996-ம் ஆண்டு வெளிவந்து வசூலில் பல சாதனைகளை புரிந்த படம் இந்தியன். இப்படத்தின் இரண்டாம் பாகம் 23 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது உருவாகி வருகிறது. 

லைக்கா தயாரிப்பில் சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் பூஜை போடப்பட்டது. ஆனால் இன்னும் படப்பிடிப்பு தொடங்கிய பாடில்லை. மேக்கப் சரியில்லை, பைனான்ஸ் கிடைக்கவில்லை என பல காரணங்கள் சொல்லப்பட்டது. 

இந்நிலையில் பைனான்ஸ் கிடைக்காததுதான் இப்படத்தின் சிக்கல் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இதனால் லைக்காவிற்கு பதிலாக இப்படத்தை தயாரிக்கும் பொறுப்பை ரிலையன்ஸிடம் ஷங்கர் ஒப்படைக்க உள்ளாராம். 

ஆனால் அவர்களோ படத்தை தயாரிக்க தயார் ஆனால் நாங்கள் சொல்வது போல் கதையில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்கிறார்களாம்.

இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் ஷங்கர் முழித்து வருகிறாராம். மேலும் தேர்தல் முடிந்து கமல் வந்த பிறகு இதைப்பற்றி பேசிக்கொள்ளலாம் என்ற யோசனையிலும் உள்ளாராம்.


Post your comment





Related News
இந்தியன் 2 டிராப்; இளம் நடிகர்களுடன் கைக்கோக்கும் ஷங்கர் – என்ன கொடுமை சார் இது?
இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா?
பாதியில் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பை விரைவில் துவங்க முடிவு
இந்தியன் 2 படத்தில் ஆர்யா - இளைஞர் படை மூலம் ஊழலை எதிர்க்கும் கமல்ஹாசன்
தைவான் பறக்கும் இந்தியன் 2 படக்குழு
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions