ஜாக்கிசானையும் கவர்ந்த கபாலி

Bookmark and Share

ஜாக்கிசானையும் கவர்ந்த கபாலி

ரஜினி நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் புதிய படம் ‘கபாலி’. ‘அட்டக்கத்தி’ பா.இரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். படம் ஆரம்பிக்க நாள் முதலே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் எட்டுத்திக்கும் பல சாதனைகளை படைத்து வருகிறது. அதுமட்டுமில்லாமல், இப்படத்தின் ரஜினியின் ஸ்டைல் மற்றும் போஸ்டர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்த தாக்கம் உலக சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் ஜாக்கிசானையும் விட்டு வைக்கவில்லை.

‘கபாலி’ படத்தின் போஸ்டர் அடங்கிய டீ-ஷர்ட்டுடன் ஜாக்கிசான் நிற்பது போன்ற ஒரு புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தில் ஜாக்கிசான் தான் அணிந்திருக்கும் டீ-ஷர்ட்டில் உள்ள ‘கபாலி’ படத்தின் போஸ்டரை கைநீட்டி காட்டுவது போல் உள்ளது. 

விரைவில் ‘கபாலி’ படத்தின் ஆடியோ வெளியீட்டை நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து கூடிய சீக்கிரத்தில் படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Post your comment





Related News
ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் மார்ச்சில் படப்பிடிப்பு தொடங்குகிறது
சினிமா வசூலை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் - கார்த்திக் சுப்புராஜ் காட்டம்
சிக்கலில் ரஜினியின் பேட்ட
பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும் - வில்லனாக நடித்தது குறித்து விஜய் சேதுபதி பேச்சு
ரஜினிகாந்த் நலமாக உள்ளார் - வதந்திகளை நம்ப வேண்டாம்
கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை - ரஜினிகாந்த்
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா? தொடரும் சர்ச்சை, தொடங்கும் அத்தியாயம்- ஸ்பெஷல்
அடுத்த சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு பல வருடங்கள் முன்பே ரஜினி சொன்ன பதில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions