
ஜாக்கிஜான் நடிக்கும் ‘குங்பு யோகா’ என்ற சர்வதேச படம் தயாராகிறது. இதில் ஜாக்கிஜான் ஜோடியாக கத்ரீனாகைப் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இப்போது அவர் நடிக்கவில்லை ஏற்கனவே பல படங்களில் நடிக்க தேதி கொடுத்து விட்டதால், ஜாக்கிஜான் படத்துக்கு நேரம் ஒதுக்க இயலவில்லை. எனவே அவருடன் நடிக்க முடிய வில்லை என்று கூறிவிட்டார்.
இதையடுத்து அந்த படத்தில் இலியானா நடிக்க ஒப்பந்தம் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்ட இலியானா சமீபகாலமாக எந்த படங்களிலும் நடிக்கவில்லை.
நல்ல கதைக்காக காத்திருக்கிறேன் என்று கூறி வந்தார். இப்போது ஜாக்கிஜான் படத்தில் நடிக்க இருக்கிறார். ஜாக்கிஜானுடன் பாலிவுட் நடிகர் சோனு சூதும் இணைந்து நடிக்கும் இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் கதை. இந்தியா, துபாய், பெய்ஜிங்கில் ‘குங்புயோகா’ படமாக்கப்படுகிறது.
Post your comment