போராட்டம் வெற்றிக்கு பிறகு இளைஞர்கள் மனதில் கொள்ள வேண்டியது இவை தான்

Bookmark and Share

போராட்டம் வெற்றிக்கு பிறகு இளைஞர்கள் மனதில் கொள்ள வேண்டியது இவை தான்

தமிழகமே இன்று இளைஞர்கள் கையில் தான் உள்ளது. ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக தீக்குச்சியாக நடந்த போராட்டம் இன்று எரிமலையாக வெடித்து சிதறியுள்ளது.

உலகம் முழுவதும் தமிழர்களை கவனிக்க தொடங்கிவிட்டனர், மஹாத்மா காந்தியின் வழியில் யாருக்கும் எந்த ஒரு தொந்தரவும் தராமல், தலைமை என்றே இல்லாமல் அவர்களாவே லட்சக்கணக்கானோர் கூடி இந்த போராட்டத்தை செய்து வருகின்றனர்.

அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள், அதே நேரத்தில் தற்போது அனைவரும் போராடுவது ஜல்லிக்கட்டு மட்டுமின்றி நாட்டு மாடுகள் அழிந்துவிடக்கூடாது என்பது தான்.

எப்படியும் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் மாணவர்கள் போராட்டம் வெற்றியடைந்துவிடும், இந்த போராட்டம் எந்த ஒரு நடிகனும் சொல்லி ஆரம்பிக்கவில்லை.

தன் ஆதர்ஸ நாயகன் படம் வந்ததை கூட மறந்து தமிழன் என்ற உணர்வோடு பலரும் போராட்டத்தை செய்து வந்தனர்.

இந்நிலையில் இளைஞர்கள் வரும் காலத்தில் ஒரு விஷயத்தை மட்டும் எந்த ஒரு இடத்திலும் செய்யவே கூடாது என்பதே அனைவருடைய விருப்பம்.

அது என்னவென்றால் புதிதாக திரைக்கு வரும் படத்தின் கட்-அவுட்டிற்கு இனி போதும் பால் அபிஷேகம் போன்ற வேலைகளை செய்ய வேண்டாமே?, இது தான் இங்கு பலரின் கோரிக்கையும். ரசிகர்கள் செய்வார்களா?


Post your comment

Related News
அஜித்தை பற்றி யாருக்கும் தெரியாத விஷயத்தை கூறிய நடிகை - ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடந்த சம்பவம்
பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்த சினேகன்
நயன்தாராவின் வில்லன் தயாரித்துள்ள "ஜல்லிக்கட்டு "
ஜல்லிக்கட்டு போராட்டம் படமாகின்றது- இயக்குனர் யார் தெரியுமா?
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிற்கு எந்த நடிகர் வந்தார் தெரியுமா? மக்கள் அமோக வரவேற்பு
ஜல்லிக்கட்டுக்காக போராடிய என்னையும் கைது செய்யுங்கள்... சிம்பு ஆவேசம்
நான் பணம் வாங்கிட்டேனா- ஆதி முதன் முறையாக கூறிய பதில்
2003லேயே இளைஞர்கள் போராட்டத்தை கணித்த கமல்ஹாசன், தெரியுமா உங்களுக்கு
PETAவுக்கு ஆதரவு தெரிவித்த முன்னணி பாலிவுட் நடிகர்
ஜல்லிக்கட்டுக்கு போராட வந்து, பெப்சி, கோக்குக்கு தூதராகிவிட்ட ஆதி!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions