அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கவனத்திற்கு ஜல்லிக்கட்டு!

Bookmark and Share

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கவனத்திற்கு ஜல்லிக்கட்டு!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து உலகம் முழுவதும் எழுச்சிப் போராட்டங்கள் களை கட்டியுள்ளன. உலக நாடுகள் பலவற்றிலும் தமிழர்கள் போராட்டங்களை விதம் விதமாக நடத்தி தமிழர்களின் வீர விளையாட்டுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இருந்த பொழுதிலும் இந்த போராடடம் சொல்லக்கூடியவகையில் வடஇந்திய ஊடகங்களின் கவனத்தை கூட ஈர்க்கவில்லை என்பதே நிதர்சன உண்மை.

இந்நிலையில்  அமெரிக்காவின் 45வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கும் நிகழ்வு  இன்று தலைநகர் வாஷிங்டன் 'கேபிடோல் கட்டிடத்தில்' நடக்கிறது.  இங்குதான் 'வெள்ளை மாளிகை'யும் உள்ளது.   இந்த நிகழ்ச்சிகளை காண அந்த பகுதியில் அதிகாலைப்பொழுதே ஒன்பது இலட்ச்சத்துக்கும் மேட்பட்ட  மக்கள் கூடியிருக்கின்றார்கள். 

இதில் பலவிதமான இனமக்கள் பல்வேறு பதாதைகளையும் தாங்கி  தங்கள் வாழ்த்துக்களையும், கோரிக்கைகளையும் முன்வைத்து கூட்டத்தில் காணப்படுகிறார்கள்.  

உலகில் உள்ள அணைத்து முன்னணி ஊடகங்களும் இங்குதான் இப்பொழுது கவனத்தை திருப்பி உள்ளனர்.  இந்த பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ள உலகின் பலநாட்டு ராஜதந்திரிகளும் வருகைதந்துள்ளனர்.

பெரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு வேண்டி நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களும் கூடியுள்ளனர்.

டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு நிகழ்வு முடிந்தவுடன் ஜல்லிக்கட்டின் முக்கியத்துவத்தையும் அதன் தொன்மையான கலாச்சார பாரம்பரியங்களையும் அனைத்து இன மக்களுக்கும் தெரியப்படுத்தும்படியான ஒரு அறிக்கையை அனைத்து சர்வதேச ஊடகங்களுக்கும் மற்றும் வெள்ளைமாளிகைக்கும் அனுப்பிவைக்க போவதாகவும் வாஷிங்டன் வட்டார தமிழ் இளையோர் அணியினர் தெரிவித்துள்ளனர்.  

இவர்களே நேற்றிரவு முதல் மக்களோடு மக்களாக ஜல்லிக்கட்டு பதாதைகளுடன் டொனால்ட் டிரம்ப்பின் பதவியேற்பு கொண்டாட்ட திடலில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நின்று தாய் தமிழகத்தின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கின்றனர்.

வாழ்த்துக்கள் மாணவர்களே.  எங்கு வாழ்ந்தாலும் தமிழர் தமிழரே.


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions