பேய் படத்துக்காக ஊட்டியில் முகாமிட்டுள்ள ஜெயம்ரவி!

Bookmark and Share

பேய் படத்துக்காக ஊட்டியில் முகாமிட்டுள்ள ஜெயம்ரவி!

ரோமியோ ஜூலியட் படத்தை அடுத்து தனது அண்ணன் ராஜா இயக்கும் தனி ஒருவன் படத்தில் நடித்து வருகிறார் ஜெயம்ரவி. இந்த படத்தில் அவர் முதன்முறையாக போலீஸ் வேடத்தில நடிப்பதாக கூறப்படுகிறது. அதோடு நயன்தாராவுடன் முதன்முறையாக ஜோடி போட்டிருக்கிறார் ஜெயம்ரவி.

இந்த நிலையில், ரோமியோ ஜூலியட் லக்ஷ்மண் இயக்கும் அடுத்த படத்திலும் நடிக்கும் அவர், தற்போது மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் ஒரு பேய் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். புதுமுக டைரக்டர் ஒருவர் இயக்கும் இந்த படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடிக்கிறார்.

இப்படத்திற்காக தற்போது ஊட்டி மலைப்பிரதேசம் மற்றும் மலைக்கு கீழே உள்ள பசுமையான பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. மேலும், இந்த படத்தின் கதையும் ஒரு ஹாலிவுட் படக்கதையை தழுவி உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

அதாவது ஒரு ஆவி ஒருவரது உடம்புக்குள் புகுந்து விடுமாம். அதையடுத்து அந்த நபர் யாரை கடித்தாலும் அவர்களும் பேயாகி விடுவார்களாம். இப்படி ஜெயம்ரவி கடிக்கும் நபர்களெல்லாம் பேயாக மாறி விடும் இந்த படத்தின் க்ளைமாக்சில் ஏராளமான பேய்கள் மோதிக்கொள்கிறதாம். ஆக, இப்படத்தின் க்ளைமாக்ஸ் படு மிரட்டலாக இருக்கும் என்று இப்போதே பயமுறுத்துகிறார்கள்.


Post your comment





Related News
NGK படத்திற்கு பிறகு ஜெயம் ரவியை இயக்கவுள்ள செல்வராகவன்?
ஒரே நிறுவனம்.. அடுத்தடுத்து 3 படங்களில் ஜெயம் ரவி
புதிய படத்திற்காக இரண்டு தோற்றத்திற்கு மாறும் அரவிந்த் சாமி
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
சின்மயி உள்நோக்கத்துடன் மீ டூ புகார் தெரிவிக்கிறார் - ராதாரவி பாய்ச்சல்
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions