ஜெயம் ரவியின் போகன் மார்ச் 18-ல் படப்பிடிப்பு!

Bookmark and Share

ஜெயம் ரவியின் போகன் மார்ச் 18-ல் படப்பிடிப்பு!

பிரபுதேவாவின் பிரபுதேவா ஸ்டுடியோஸ் பட நிறுவனம் அதிகப் பொருட்செலவில் தயாரிக்கும் படம் “போகன்“

சென்ற வருடம் வசூலில் அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் நாயகன் ஜெயம்ரவி, ஹன்சிகா, வி.டி.வி.கணேஷ், இயக்குனர் லஷ்மன், இசையமைப்பாளர் இமான், ஒளிப்பதிவாளர் சௌந்தர்ராஜன், கலை இயக்குனர் மிலன், எடிட்டர் ஆண்டனி, மாஸ்டர் திலீப்சுப்பராயன், வசனகர்த்தா சந்துரு, பாடலாசிரியர்கள் மதன்கார்க்கி, தாமரை, ரோகேஷ் ஆகியோர் போகன் படத்தில் மீண்டும் இணைகிறார்கள்.

தனி ஒருவன் படத்தின் சூப்பர் ஹிட் கூட்டணியான ஜெயம்ரவி – அரவிந்த்ஸ்வாமி கூட்டணியும் கூடுதல் பலம் சேர்க்கிறது போகனுக்கு. இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 18 ம் தேதி பெரம்பூர் பின்னிமில்லில் துவங்குகிறது. பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

ரோமியோ ஜூலியட் படத்தில் சூப்பர் ஹிட் பாடல் டண்டணக்கா.. போகன் படத்தில் “டமால் டுமீல்“ என்ற பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு துவங்குகிறது. 20 நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுகிறது. மிக பிரமாண்டமான படமாக பிரபுதேவா தயாரிக்கிறார்.

 


Post your comment





Related News
இயக்குநராகும் ஜெயம் ரவி, ஹீரோ யார் தெரியுமா? கேட்டால் மிரண்டு போவீர்கள்!
தனி ஒருவன் 2 டிராப்பா? வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
ராதா ரவியின் மோசமான விமர்சனம் குறித்து நயன்தாரா முதன்முதலாக பதில்
NGK படத்திற்கு பிறகு ஜெயம் ரவியை இயக்கவுள்ள செல்வராகவன்?
ஒரே நிறுவனம்.. அடுத்தடுத்து 3 படங்களில் ஜெயம் ரவி
புதிய படத்திற்காக இரண்டு தோற்றத்திற்கு மாறும் அரவிந்த் சாமி
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
சின்மயி உள்நோக்கத்துடன் மீ டூ புகார் தெரிவிக்கிறார் - ராதாரவி பாய்ச்சல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions