ஜெயம் ரவியின் சகலகலா வல்லவன் பாடல்கள் இன்று வெளியீடு

Bookmark and Share

ஜெயம் ரவியின் சகலகலா வல்லவன் பாடல்கள் இன்று வெளியீடு

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘சகலகலா வல்லவன் - அப்பாடக்கர்’. முதலில் இப்படத்திற்கு ‘அப்பாடக்கர்’ என்றுதான் பெயர் வைத்திருந்தனர். தற்போது, ‘சகலகலா வல்லவன்’ என்று மாற்றியுள்ளனர். கமல் நடிப்பில் ஏற்கெனவே வெளிவந்த படத்தின் தலைப்பையே இப்படத்திற்கும் வைத்துள்ளனர். 

இப்படத்தை சுராஜ் இயக்கியுள்ளார். திரிஷா, அஞ்சலி, விவேக், சூரி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் இன்று வெளியிடப்படுகிறது. சென்னையில் பிரபலமான எப்.எம்.மில் இப்படத்தின் பாடல்களை வெளியிடவுள்ளனர். இந்த நிகழ்ச்சியில், நடிகர் சூரி, இயக்குனர் சுராஜ், இசையமைப்பாளர் தமன், தயாரிப்பாளர் முரளி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். 

சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த ‘ரோமியோ ஜூலியட்’ படத்தின் பாடல்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றன. அந்த வரிசையில் இந்த படத்தின் பாடல்களும் பெரிய அளவில் வெற்றி பெறும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். 

இப்படத்தை பல வெற்றிப்படங்களை தயாரித்த லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.


Post your comment





Related News
இயக்குநராகும் ஜெயம் ரவி, ஹீரோ யார் தெரியுமா? கேட்டால் மிரண்டு போவீர்கள்!
தனி ஒருவன் 2 டிராப்பா? வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
ராதா ரவியின் மோசமான விமர்சனம் குறித்து நயன்தாரா முதன்முதலாக பதில்
NGK படத்திற்கு பிறகு ஜெயம் ரவியை இயக்கவுள்ள செல்வராகவன்?
ஒரே நிறுவனம்.. அடுத்தடுத்து 3 படங்களில் ஜெயம் ரவி
புதிய படத்திற்காக இரண்டு தோற்றத்திற்கு மாறும் அரவிந்த் சாமி
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
சின்மயி உள்நோக்கத்துடன் மீ டூ புகார் தெரிவிக்கிறார் - ராதாரவி பாய்ச்சல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions