கண்ணீர் விட்டு நன்றி கூறிய ஜெயம்ரவி, மோகன்ராஜா!

Bookmark and Share

கண்ணீர் விட்டு நன்றி கூறிய ஜெயம்ரவி, மோகன்ராஜா!

தனிஒருவன் படத்திற்கான வெற்றிவிழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் மோகன்ராஜா பேசும்போது, “ என்னிடம் வரும் ஹீரோக்கள் அனைவருமே ரீமேக் படம் எடுக்குறீங்க என்றால் நடிக்க தயார் என்றே கூறினார்கள். 

இத்தனை படங்கள் எடுத்தும் இயக்குநராக என்னை யாரும் நம்பவில்லை. நான் புத்திசாலியெல்லாம் கிடையாது. என்னுடைய உழைப்பை மட்டும் தான் இந்தப் படத்திற்கு விதைத்தேன். அதன் அறுவடையாகத்தான் இந்த வெற்றி கிடைத்திருக்கிறது” என்றார். 

மோகன்ராஜா பேசும்போதே கண்ணீர்விட, ஜெயம்ரவியும் மேடையிலேயே கண்ணீர்விட்டு அழுதார். வேதனை, கஷ்டங்களைக் கடந்த அவர்களின் வெற்றி இந்த கண்ணீரின் மூலம் உண்மையானது.

அடுத்து பேசிய ஜெயம்ரவி, “ என்னோட வெற்றியைப் பார்த்து தான் அண்ணன் சந்தோஷப்பட்டிருக்கிறார். இப்போ அவரோட வெற்றியைப் பார்த்து நான் சந்தோஷப்படுகிறேன். 

ஜெயம் படம் என்னுடைய நுழைவுச் சீட்டு மாதிரி. தனிஒருவன் என் நெஞ்சில் குத்திய பச்சை மாதிரி. என் உயிர், உடல் உள்ளவரைக்கும் என் நெஞ்சிலேயே இருக்கும். என் அண்ணன் ரொம்ப சீரியஸான பட இயக்குநர் என்பதை இந்தப் படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார்.

அவரை நினைக்கும் போது ரொம்ப பெருமையாக இருக்கிறது. மேலும் இந்தப் படத்தில் உடன் நடித்த நடிகர்கள் முதல் படத்திற்கு பின்னால் உழைத்த அனைவருக்கும் தன் நன்றியைக் கூறினார் ஜெயம்ரவி.


Post your comment





Related News
தனி ஒருவன் 2 டிராப்பா? வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
விஜய்யுடன் மீண்டும் இணைவதை உறுதிப்படுத்திய மோகன்ராஜா
ஒரே நிறுவனம்.. அடுத்தடுத்து 3 படங்களில் ஜெயம் ரவி
நந்தாவும், ரமணாவும் என்னை அவமானப்படுத்தினார்கள் - பார்த்திபன் பரபரப்பு பேட்டி
ரஜினியின் ஆதங்கத்துக்கு இளையராஜா பதில் - சூப்பர் ஸ்டார்னா ரஜினி தான் என புகழாரம்
படம் ரிலீஸானது - சிம்பு கோரிக்கையை ஏற்காத ரசிகர்கள் பேனர் வைத்து பால் ஊற்றினார்கள்
வந்தா ராஜாவாதான் வருவேன் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஆரவ்வின் அடுத்த படம் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் - சரண் இயக்குகிறார்
ரஜினியை நான் இயக்கும் படம் விசில் பறக்கும் - ராஜமவுலி
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions