இயக்குநராகும் ஜெயம் ரவி, ஹீரோ யார் தெரியுமா? கேட்டால் மிரண்டு போவீர்கள்!

Bookmark and Share

இயக்குநராகும் ஜெயம் ரவி, ஹீரோ யார் தெரியுமா? கேட்டால் மிரண்டு போவீர்கள்!

ஜெயம் ரவி அடுத்த ஆண்டு இயக்குநர் அவதாரம் எடுக்கிறாராம். இவர் இயக்கும் முதல் படத்தில் காமெடி நடிகர் யோகி பாபுதான் ஹீரோ என்றும் அவர் கூறியுள்ளார். 

அடங்க மறு படத்தின் வெற்றியை அடுத்து ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறார். வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.காஜல் அகர்வால் இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

ஹிப்ஹாப் தமிழா ஆதி இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஜெயம் ரவிபள்ளி மாணவனாகவும் இளைஞனாகவும் நடிக்கும் இப்படத்துக்கு கோமாளி என பெயரிட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

மேலும் ஜூன் மாதம் இப்படம் திரைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து ஜெயம்ரவி நடிக்கும் புதிய படத்தை லக்‌ஷ்மண் இயக்குகிறார். இது ஜெயம் ரவி நடிக்கும் 25-வது படம்.இது ஒருபக்கம் இருக்க ஜெயம் ரவி அடுத்த ஆண்டு இயக்குநர் அவதாரம் எடுக்கவிருக்கிறாராம். இவர் இயக்கும் முதல் படத்தில் காமெடி நடிகர் யோகி பாபுதான் ஹீரோ என்றும் அவர் கூறியுள்ளார். 


Post your comment





Related News
ஒருநாளைக்கு 15 லட்சம் சம்பளம் வாங்கும் யோகி பாபு? மேடையிலேயே வெளிவந்த உண்மை!
தனி ஒருவன் 2 டிராப்பா? வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
ஒரே நிறுவனம்.. அடுத்தடுத்து 3 படங்களில் ஜெயம் ரவி
வடிவேலு வரவில்லை, இம்சை அரசனாகும் யோகி பாபு
படமாகும் வாழ்க்கை கதை சந்திரபாபு வேடத்தில் பிரபுதேவா?
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
முதல் இடம் பிடித்த யோகி பாபு
வரி கட்டாததால் மகேஷ்பாபுவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
யோகி பாபுவுக்கு தைரியம் கொடுத்த அஜித்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions