ஈழத் தமிழர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் சிலரால் இங்கு அரசியல் செய்ய முடியாது! - நடிகர் ஜீவா

Bookmark and Share

ஈழத் தமிழர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் சிலரால் இங்கு அரசியல் செய்ய முடியாது! - நடிகர் ஜீவா

ஈழத் தமிழ் மக்கள் சந்தோஷமாக இருந்தால் சிலருக்குப் பிடிக்காது. அவர்கள் சந்தோஷமாக இருந்தால் இவர்களால் அரசியல் செய்ய முடியாதல்லவா என்று நடிகர் ஜீவா கூறியுள்ளார்.

போரில் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்களுக்கு வீடு கொடுக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க இலங்கை செல்லவிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இங்குள்ள சிலரது எதிர்ப்பு நிலை அறிந்து, பயணத்தை ரத்து செய்துவிட்டார்.

இந்த செய்தி வெளியானதுமே, ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்த தலைவர்களை காய்ச்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் பலரும். குறிப்பாக சமூக வலைத் தளங்களில் வைகோ, திருமாவளவன், வேல்முருகன் உள்ளிட்டோரை கடுமையாகக் கண்டித்து கருத்து எழுதி வருகின்றனர்.

இந்த நிலையில் மாப்பிள்ளை விநாயகர், ஆரம்பமே அட்டகாசம் படங்களின் ஹீரோ நடிகர் ஜீவா தனது பேஸ்புக் பக்கத்தில் இப்படிக் கருத்து தெரிவித்துள்ளார்:

இலங்கை தமிழ் மக்களிடம் பணமாக ,நன்கொடையாக வாங்கியே பழக்கப்பட்ட சில அரசியல் கட்சிகளுக்கு போரில் பாதிக்கபட்டமக்களுக்கு வேறு யாரவது வீடு கொடுத்தால், உதவி செய்தால் பிடிக்காது.

காரணம் அந்த மக்கள் மகிழ்ச்சியாக இருந்தால் சிலரால் இங்கு அரசியல் செய்ய முடியாது. ஈழம் பேசும் அரசியல்வாதிகளில் சிலர் அந்த மக்களை சுரண்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இதை பலமுறை நான் சந்தித்தபோது இலங்கை தமிழ்மக்களே என்னிடம் சொல்லி இருக்கிறார்கள்.. .தைரியம் இருந்தால் அந்த மக்களின் பணத்தை நாங்கள் வாங்கியதில்லை என்று இதுபோன்ற கட்சிகள் சொல்லட்டுமே பார்க்கலாம்," என்று கூறியுள்ளார்.


Post your comment

Related News
அடுத்த படத்திற்காக கிரிக்கெட் பயிலும் ஜீவா
ஜீவா-திஷாபாண்டே ஜோடியாக நடிப்பில் திகில் நகைச்சுவை படம் " கொம்பு"
மீண்டும் விஜய்யுடன் இணைகிறேன் - உறுதிப்படுத்திய ஜீவா
பிரம்மாண்ட அரங்கில் உருவாகும் ஜீவாவின் ‘கொரில்லா’
அடுத்த கட்டத்தில் `கலகலப்பு-2'
படம் முழுக்க ஒரே கவர்ச்சி, திணறி போன தணிக்கை குழு - எந்த படம் அது?
லொள்ளு சபா ஜீவாவுக்காக ரஜினி செய்த காரியம்
ஜீவாவை பிளேடு வைத்து மிரட்டும் நயன்தாரா!
ஜீவாவின் ஜெமினி கணேசன்
ஜீவாவுக்கு சப்போட் பண்ண ஆர்யா !
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions