பிரதாப் போத்தன் மீது புகார் கொடுத்தார் ஜெயராம்!

Bookmark and Share

பிரதாப் போத்தன் மீது புகார் கொடுத்தார் ஜெயராம்!

கடந்த சில நாட்களாகவே ஜெயராம், பிரதாப் போத்தன் என இரண்டு தரப்புமே அமைதியாக இருந்ததால், சரி.. பிரச்சனை இத்துடன் முடிந்தது என்றுதான் நினைத்திருந்தார்கள் அனைவரும். ஆனால் இப்போது பிரதாப் போத்தன் மீது மலையாள நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார் ஜெயராம்.

அதில், “என்னையும் என் மகன் காளிதாஸ் பற்றியும்  பிரதாப் போத்தன் கூறிய வார்த்தைகள் எங்கள் குடும்பத்தை காயப்படுத்தியுள்ளன.. ரசிகர்களும் என் நலம் விரும்பிகளும் என்னைப்பற்றி தவறாக நினைக்கும் அபாயம் இருக்கிறது. இதுகுறித்து அவர்மீது சங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என கூறியுள்ளார்.

பிரதாப், ஜெயராம் பற்றி என்ன சொன்னார் என்பதை ஜஸ்ட் இங்கே கொஞ்சம் ரீவைண்ட் பண்ணி பார்த்து விடுவோம். “மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டாக இருந்து என அண்ணன் ஹரிபோத்தனால் நடிகராக சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகர் அவர். பத்மஸ்ரீ பட்டமெல்லாம் கூட வாங்கியிருக்கிறார்.

அதுகூட நடிப்புக்காக வாங்கவில்லை. தனது செல்வாக்கை பயன்படுத்தி வாங்கியது தான். ஆனால் எனது அண்ணன் இறந்தபோது அவரது இறுதி ஊர்வலத்துக்கூட வரவில்லை.. தயவு செய்து புத்தகங்களையாவது நிறைய படித்து எப்படி மனிதனாக இருக்கவேண்டும் என கற்றுக்கொள்ளட்டும் அந்த நடிகர்”. 

இதுதான் அவர் சொன்னது. ஜெயராமிடம் இதுகுறித்து கேட்டபோது அதைப்பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. மேலும் அவர்மீது சட்டப்படியான அவதூறு வழக்கும் தொடுக்கப்போவதில்லை என அமைதியாக இருந்துவிட்டார். ஆனால் அவரது ரசிகர்களிடமும், நலம் விரும்பிகளிடமும் எதிர்மறையான தாக்கத்தை இது ஏற்படுத்திவிடும் என்பதால் இப்போது நடிகர் சங்கத்தில் பிரதாப் போத்தன் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்கமும் குணச்சித்திர நடிகர் நெடுமுடி வேணுவை இந்தப்பிரச்சனையை பேசி தீர்க்கும்படி கேட்டுள்ளது. அவரால் முடியாவிட்டால், அடுத்து கமிட்டியின் முக்கிய உறுப்பினர்கள் முன்னிலையில் இருவரையும் அமர வைத்து பேசித்தீர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions