நடிகை ஜியாகான் கொலையா?: காதலனிடம் சி.பி.ஐ. அதிரடி விசாரணை

Bookmark and Share

நடிகை ஜியாகான் கொலையா?: காதலனிடம் சி.பி.ஐ. அதிரடி விசாரணை

இந்தியில் பிரபல நடிகையாக இருந்தவர் ஜியாகான். 2007–ல் ராம்கோபால் இயக்கிய நிஷப்த் இந்தி படத்தில் அறிமுகமானார். ஏ.ஆர்.முருகதாஸ், கஜினி படத்தை இந்தியில் ரீமேக் செய்த போது நயன்தாரா கேரக்டரில் நடித்தார்.
ஜியாகானும் இந்தி நடிகை சூரஜ்ஜூம் காதல் வயப்பட்டனர். இவர் பிரபல இந்தி நடிகர் ஆதித்யா பஞ்சோலியின் மகன் ஆவார். ஜியாகானும் சூரஜ்ஜும் ஒன்றாக சுற்றினார்கள். நட்சத்திர ஓட்டல்களிலும் தங்கினார்கள். இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் 2013 ஜூன் 3–ந்தேதி ஜியாகான் மும்பையில் உள்ள வீட்டில் பிணமாக தொங்கினார். அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் அவர் சாவதற்கு சூரஜ் காரணம் என்றும் கூறப்பட்டது. இதையடுத்து சூரஜ் கைதானார். பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
ஆனால் ஜியாகான் தற்கொலை செய்யவில்லை என்றும் அவரை அடித்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டுள்ளனர் என்று சூரஜ் குடும்பத்தினர் மீது ஜியாகானின் தாய் ராமியாகான் பரபரப்பு புகார் கூறினார்.
ஜியாகான் உடலில் காயங்கள் இருந்ததையும் சுட்டிக் காட்டினார். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று மும்பை கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையை துவங்கினர். ஆதித்யா பஞ்சோலி மற்றும் சூரஜ் வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதனால் மும்பை பட உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


Post your comment





Related News
தளபதி 63-ல் 15 நிமிஷம் நடிக்க ஷாருக்கான் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ரிலீஸ் நேரத்தில் சர்ச்சையில் சிக்கிய அயோக்யா – விஷால் படத்தில் இதுவே முதல்முறை!
விஜய் நாயகியை ஓரங்கட்ட சல்மான் கான் போட்ட திட்டம் – ஏன்பா இப்படி?
மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான்
பிரபல இந்தி நடிகர் காதர் கான் உடல்நலக்குறைவால் காலமானார்
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions