‘ஜோக்கர்’ ஹீரோ குரு சோமசுந்தரம் நடிக்கும் ஓடு ராஜா ஓடு

Bookmark and Share

‘ஜோக்கர்’ ஹீரோ குரு சோமசுந்தரம் நடிக்கும் ஓடு ராஜா ஓடு

மெகா ஹிட்டான ‘ஜோக்கர்’ பட நாயகன் குரு சோமசுந்தரம் நடிப்பில் ஜதின் மற்றும் நிஷாந்த் ஆகியோரின் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘ஓடு ராஜா ஓடு’. காதலித்து  திருமணம் செய்து கொண்ட  கணவன் மனைவியின் சந்தோஷமான வாழ்க்கையில் செட் டாப் பாக்ஸ் எந்த அளவுக்கு பிரச்சினையை ஏற்படுத்தி விஸ்வரூபம் எடுத்து நாயகனின் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதை சுவாரஸ்யமாக படமாக்கி உள்ளனர்.

செல்லும் இடமெல்லாம் நாயகனுக்கு ஏற்படும் பிரச்சினைகளை புதுப்புது காமெடி களத்துடன் கதையை நகர்த்தி உள்ளனர். எடிட்டராக பணியாற்றியுள்ள இப்படத்தின் இயக்குனர்கள் முற்றிலும் புதுக்கோணத்தில், புதிய சிந்தனையுடன் இளைஞர்களுக்கு பிடிக்கும் விதத்தில் வித்தியாசமாக காமெடி திரில்லர் படமாக உருவாக்கி உள்ளனர்.

இப்படத்தில் ‘ஜோக்கர்’ பட ஹீரோ குரு சோமசுந்தரம், நாசர், லட்சுமி பிரியா, ஆனந்த் சுவாமி, ஆஷிகா சால்வன், வினோத், ரவீந்திர விஜய், வெங்கடேஷ் ஹரிநாதன், கே.எஸ்.அபிஷேக், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், தீபக்பாகா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

திரைக்கதை, எடிட்டிங்  - நிஷாந்த் ரவீந்திரன், இசை- தோஷ் நந்தா, ஒளிப்பதிவு - ஜத்தின் சங்கர் ராஜ் & சுனில்C.K. இப்படத்தை விஜய்மூலன்டால்கீஸ் சார்பாக விஜய்மூலன் தயாரித்து உள்ளார். இப்படத்தை அடுத்து மாதவன் நடிப்பில் மிகப்பிரமாண்டமான படத்தை தயாரிக்க இருக்கிறார். இரும்புத்திரை படத்திற்கு பிறகு P.T.செல்வகுமார் இப்படத்தை வெளியிடுகிறார்.


Post your comment





Related News
விஜய்யுடன் மீண்டும் இணைவதை உறுதிப்படுத்திய மோகன்ராஜா
நந்தாவும், ரமணாவும் என்னை அவமானப்படுத்தினார்கள் - பார்த்திபன் பரபரப்பு பேட்டி
ரஜினியின் ஆதங்கத்துக்கு இளையராஜா பதில் - சூப்பர் ஸ்டார்னா ரஜினி தான் என புகழாரம்
படம் ரிலீஸானது - சிம்பு கோரிக்கையை ஏற்காத ரசிகர்கள் பேனர் வைத்து பால் ஊற்றினார்கள்
வந்தா ராஜாவாதான் வருவேன் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஆரவ்வின் அடுத்த படம் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் - சரண் இயக்குகிறார்
ரஜினியை நான் இயக்கும் படம் விசில் பறக்கும் - ராஜமவுலி
ராஜமவுலியின் அடுத்த படத்தில் சமுத்திரக்கனி
தயாரிப்பாளர்களின் காப்புரிமையில் தலையிட இளையராஜாவுக்கு தடை - தயாரிப்பாளர்கள் வழக்கு
என் பாடலில் எனக்கு பங்கு இல்லையா? - ராயல்டி கோரி இளையராஜா வெளியிட்ட வீடியோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions