பழம்பெரும் நடிகை ஜோதிலட்சுமி மரணம்!

Bookmark and Share

பழம்பெரும் நடிகை ஜோதிலட்சுமி மரணம்!

1963-ம் ஆண்டு எம்.ஜி.அர். நடித்த ‘பெரிய இடத்துப் பெண்’ படத்தில் இரண்டாவது கதாநாயகியாக அறிமுகமானவர், ஜோதிலட்சுமி. பின்னாளில் 1970-ம் ஆண்டுவாக்கில் பல படங்களில் நடனப் பெண்ணாகவும், வில்லியாகவும், தேடி வந்த மாப்பிள்ளை, தலைவன் உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து அனைவரின் மனங்களையும் கவர்ந்தார்.

குறிப்பாக, அடிமைப் பெண் படத்தில் வரும் ‘காலத்தை வென்றவன் நீ’, ‘பெரிய இடத்துப் பெண் படத்தில் இடம்பெற்ற ‘கட்டோடு குழலாட, ஆட’ போன்ற இன்றளவும் தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிவரும் பாடல் காட்சிகளில் தோன்றும் ஜோதிலட்சுமி, பழைய எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றும், சில தெலுங்கு படங்களில் ‘லேடி ஜேம்ஸ் பாண்ட்’ ஆகவும் திறம்பட நடித்திருந்தார்.

1980-ம் ஆண்டுவாக்கில் இவரது தங்கை ஜெயமாலினி தென்னிந்தியப் படங்களில் நடன காட்சிகளில் அறிமுகமான பின்னர் ஜோதிலட்சுமியின் செல்வாக்கு சரிவை சந்தித்தது. எனினும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என சுமார் 300 படங்களில் அவர் நடித்திருந்தார்.

சமீபகாலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த ஜோதிலட்சுமி சென்னையில் நேற்று இரவு காலமானார். அவரது மறைவிற்கு பல திரையுலக பிரபலங்களும் இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.


Post your comment

Related News
உச்சக்கட்ட கவர்ச்சி ஃபோட்டோவை வெளியிட்டு கிறங்கடிக்கும் ராய் லக்ஷ்மி – வைரல் புகைப்படங்கள்
கார்த்தியின் ஜோடியாக ஜோதிகாவா? இதுதான் முதல்முறை
உடல் நலக்குறைவு காரணமாக நடிகை விஜயலட்சுமி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
பட்டாச ரெடி பண்ணுங்க - சர்கார் குறித்து வரலட்சுமி ட்விட்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
ஜோதிகாவின் “காற்றின் மொழி“ படத்தில் இடம்பெறும் உலக புகழ் பெற்ற ”ஜிமிக்கி கம்மல்“ பாடல்..!
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions