ஜோதிகா படத்தில் இணைந்த 96 பிரபலம் – யார் தெரியுமா?

Bookmark and Share

ஜோதிகா படத்தில் இணைந்த 96 பிரபலம் – யார் தெரியுமா?

திருமணத்திற்கு பிறகு நீண்ட காலம் ஓய்வில் இருந்த ஜோதிகா, 36 வயதினிலே படத்தின் மூலம் அதிரடியாக கம்பேக் கொடுத்தார்.

அந்த படத்திற்கு பிறகு அடுத்தடுத்து பல படங்களில் நடித்துவரும் அவர் இதில் பெரும்பாலும் நாயகி சார்ந்த படங்களிலேயே நடிக்கிறார்.அந்தவகையில் அடுத்ததாக குலேபகவாலி இயக்குனர் கல்யாணின் இயக்கத்தில் ஜாக்பாட் படத்தில் நடித்துள்ளார்.

35 நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.ஜோதிகாவுடன் ரேவதி, ஆனந்த்ராஜ், யோகிபாபு, மன்சூர் அலிகான் என ஒரு பட்டாளமே நடித்துள்ளனர்.

சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளனர். இதுபோக இரண்டு புதுமுக இயக்குனர்களின் படங்களிலும் ஜோதிகா நடித்து வருகிறார்.இதில் ஒரு படத்தை ஃபெட்ரிக் இயக்குகிறார்.

இப்படத்திற்கு 96 படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைப்பார் என தகவல் கசிந்துள்ளது. 96 படத்தின் வெற்றிக்குப் பிறகு சீதக்காதி, உறியடி 2 என அடுத்தடுத்து பல படங்களில் கோவிந்த் வசந்தா பணியாற்றியுள்ளார். 


Post your comment





Related News
தமிழ் சினிமாவை இழுத்து மூடுங்கள் - வசந்த பாலன் ஆவேச பேச்சு
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
அப்பாவால் அப்படி ஒரு படம் பண்ண முடியாதுப்பா- வசந்தபாலனின் உருக்கமும், கிண்டலும்
ஹெலிகாப்டர் வரை பெண்கள் கேட்பதற்கு இது தான் காரணம்- வசந்தபாலன் அதிரடி
காக்கா முட்டை ஒரு தேவதூதன் - வசந்தபாலன்
வானவில் வாழ்க்கை டீமுடன் மீண்டும் ஜேம்ஸ்வசந்தன்!
மீண்டும் சர்ச்சையில் \'வசந்தகுமாரன்\'
மீண்டும் வசந்தகுமாரன்!
15 பாடல்களை யூ டியூப்பில் வெளியிட்டார் ஜேம்ஸ் வசந்தன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions