லைக்கா போட்ட ஒரு டிவீட் – உற்சாகத்தின் எல்லைக்கு சென்ற சூர்யா ரசிகர்கள்!

Bookmark and Share

லைக்கா போட்ட ஒரு டிவீட் – உற்சாகத்தின் எல்லைக்கு சென்ற சூர்யா ரசிகர்கள்!

கே.வி.ஆனந்த் - சூர்யா கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் காப்பான். இயக்குநர் கே.வி.ஆனந்த், வரும் ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக இப்படத்தின் அப்டேட் வெளிவரும் என்று கூறியிருந்தார்.

அது காப்பான் படத்தின் டீசர் என்று நாம் ஏற்கனவே கூறியிருந்தோம். இந்நிலையில் படக்குழுவும் தற்போது இதை உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் இரவு 7 மணிக்கு இந்த டீசர் இணையத்தில் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர்.

நேற்றுதான் என்.ஜி.கே படத்தின் பாடல் வெளியாகியிருந்தது. அதற்குள் இன்னொரு சூர்யா பட அப்டேட் என்பதால் அவருடைய ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சியில் உள்ளார்கள்.

சூர்யா ஜோடியாக சாயிஷா நடிக்கும் இப்படத்தில் பிரேம், சமுத்திரக்கனி, ஆர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.மேலும் மலையால சூப்பர் ஸ்டாரான மோகன்லால் இப்படத்தில் பிரதமராக நடித்து வருகிறார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions