காப்பான் டீசர் படைத்த பிரம்மாண்ட சாதனை – அதிரவைத்த சூர்யா ரசிகர்கள்!

Bookmark and Share

காப்பான் டீசர் படைத்த பிரம்மாண்ட சாதனை – அதிரவைத்த சூர்யா ரசிகர்கள்!

கே.வி.ஆனந்த் - சூர்யா கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் காப்பான். இப்படத்தின் டீசர் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.

வெளிவந்த 12 மணிநேரத்தில் 2 மில்லியன் பார்வைகளை கடந்து இப்படம் அதிவேகமாக 2 மில்லியன் பார்வைகளை கடந்த சூர்யா பட டீசர் எனும் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

தற்போது வரை இந்த டீசர் 5 மில்லியனுக்கும் அதிகமான  முறை கண்டுகளிக்கப்பட்டுள்ளது. இதே வேகத்தில் சென்றால் சூர்யா படங்களில் அதிகமுறை பார்க்கப்பட்ட டீசர் எனும் இமாலய சாதனையை இந்த டீசர் படைக்கும் என சொல்லப்படுகிறது.

டீசரை தொடர்ந்து இப்படம் வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா ஜோடியாக சாயிஷா நடிக்கும் இப்படத்தில் பிரேம், சமுத்திரக்கனி, ஆர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் மலையால சூப்பர் ஸ்டாரான மோகன்லால் இப்படத்தில் பிரதமராக நடித்து வருகிறார்.  


Post your comment





Related News
காப்பான் புதிய புகைப்படம் வெளியிட்ட கே.வி.ஆனந்த் – வைரலாகும் புகைப்படம் உள்ளே!
காப்பான் குறித்த இன்னொரு முக்கியமான தகவல் – உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள்!
லைக்கா போட்ட ஒரு டிவீட் – உற்சாகத்தின் எல்லைக்கு சென்ற சூர்யா ரசிகர்கள்!
புத்தாண்டில் மாஸ் காட்டிய சூர்யா - அடுத்த படத்திற்கு காப்பான் என தலைப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions