காப்பான் டீசர் படைத்த பிரம்மாண்ட சாதனை – திகைத்துப்போய் டிவீட் போட்ட கே.வி.ஆனந்த்!

Bookmark and Share

காப்பான் டீசர் படைத்த பிரம்மாண்ட சாதனை – திகைத்துப்போய் டிவீட் போட்ட கே.வி.ஆனந்த்!

கே.வி.ஆனந்த் – சூர்யா கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் காப்பான். இப்படத்தின் டீசர் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.

வெளிவந்த 12 மணிநேரத்தில் 2 மில்லியன் பார்வைகளை கடந்து இப்படம் அதிவேகமாக 2 மில்லியன் பார்வைகளை கடந்த சூர்யா பட டீசர் எனும் புதிய சாதனையை நிகழ்த்தியது.

இதைதொடர்ந்து தற்போது இந்த டீசர் 10 மில்லியனுக்கும் அதிகமான முறை கண்டுகளிக்கப்பட்டுள்ளது. சூர்யா பட டீசர் இவ்வளவு குறுகிய காலத்தில் இந்த இலக்கை அடைவது இதுவே முதல்முறை. இதனால் நெகிழ்ந்துப் போன கே.வி.ஆனந்த், ரசிகர்களுக்கு டிவிட்டரில் உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார். 

இதே வேகத்தில் சென்றால் சூர்யா படங்களில் அதிகமுறை பார்க்கப்பட்ட டீசர் எனும் இமாலய சாதனையை இந்த டீசர் படைக்கும் என சொல்லப்படுகிறது.டீசரை தொடர்ந்து இப்படம் வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா ஜோடியாக சாயிஷா நடிக்கும் இப்படத்தில் பிரேம், சமுத்திரக்கனி, ஆர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் மலையால சூப்பர் ஸ்டாரான மோகன்லால் இப்படத்தில் பிரதமராக நடித்து வருகிறார்.


Post your comment





Related News
காப்பான் புதிய புகைப்படம் வெளியிட்ட கே.வி.ஆனந்த் – வைரலாகும் புகைப்படம் உள்ளே!
காப்பான் டீசர் படைத்த பிரம்மாண்ட சாதனை – அதிரவைத்த சூர்யா ரசிகர்கள்!
காப்பான் குறித்த இன்னொரு முக்கியமான தகவல் – உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள்!
லைக்கா போட்ட ஒரு டிவீட் – உற்சாகத்தின் எல்லைக்கு சென்ற சூர்யா ரசிகர்கள்!
மோகன்லால், பிரபுதேவாவுக்கு பத்ம விருதுகள் - ஜனாதிபதி வழங்கினார்
மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் - எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் சமுத்திரக்கனி
புத்தாண்டில் மாஸ் காட்டிய சூர்யா - அடுத்த படத்திற்கு காப்பான் என தலைப்பு
ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions