வயதான லாரன்ஸுக்கு ஜோடியான காஜல் அகர்வால்

Bookmark and Share

வயதான லாரன்ஸுக்கு ஜோடியான காஜல் அகர்வால்

ராகவா லாரன்ஸ் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த ‘காஞ்சனா-2’ படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. சுமார் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்த இப்படத்தைத் தொடர்ந்து இதன் 3-ம் பாகத்தை லாரன்ஸ் எடுப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், யாரும் எதிர்பார்க்காதபடி மெகா பட்ஜெட்டில் இரண்டு படங்களை இயக்க முடிவு செய்துள்ளார். 

அதன்படி, ‘காஞ்சனா-2’ படத்தில் லாரன்ஸ் ஏற்று நடித்திருந்த ஒரு கதாபாத்திரமான மொட்ட சிவா கதாபாத்திரம் பேசும், ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ என்ற வசனத்தையே தலைப்பாக வைத்து ஒரு படத்தை இயக்கி நடிக்கவுள்ளார். 

இப்படத்தை லாரன்ஸ் தனது சொந்த நிறுவனமான ராகவேந்திர புரொடக்ஷன்ஸ் மற்றும் வேந்தர் மூவிஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். இப்படத்தில் லாரன்ஸ், மொட்டையடித்து, முடி நரைத்து வயதான தோற்றத்தில் வருகிறார். 

இப்படத்தை ஆக்ஷன் மற்றும் நகைச்சுவை கலந்து எடுக்கவிடுக்கிறார். மேலும், இப்படத்தில் மக்களுக்கு நல்லதொரு மெசேஜும் சொல்லப்போவதாக லாரன்ஸ் தெரிவித்துள்ளார். இதில், இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கவிருக்கிறார். 

மேலும், படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிடவிருக்கிறார்கள். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது. அவை சமூக இணையதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.


Post your comment





Related News
விஜய்யை பார்க்க வந்த பிரம்மாண்ட கூட்டம் – இதுவரை சொல்லாத ரகசியத்தை சொன்ன நடிகை!
காஜல் அகர்வாலின் புதிய அவதாரம்
அனைத்து துறைகளிலும் மோசமானவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள் - காஜல் அகர்வால்
காஜல் அகர்வாலுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு
நடிகரை திருமணம் செய்ய மாட்டேன் - காஜல் அகர்வால்
மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions