இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்

Bookmark and Share

இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்

மும்பை அழகியான காஜல் அகர்வால் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இவர் இந்தித் திரைப்படமான ‘கியூன் ஹோ கயா நா’வில் 2004ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ராயின் தோழியாக அறிமுகமானார்.

பின்னர் தெலுங்கில் ‘லட்சுமி கல்யாணம்’ என்ற படத்திலும், தமிழில் ‘பழனி’ என்ற படத்திலும் நடித்தார். ராஜ மவுலி இயக்கத்தில் 2009ஆம் ஆண்டு வெளியான ‘மகதீரா’ திரைப்படம் மூலம் அனைவரின் கவனத்தையும் பெற்றார்.

அதிலிருந்து இப்போது வரை அவருக்கான கிரேஸ் குறையாமல் இருந்து வருகிறது. தென்னிந்தியாவின் முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் நடித்துவிட்டார்.

பத்து வருடங்களில் 50 படங்களுக்கு மேல் நடித்து விட்டார் காஜல். இந்த நிலையில் ஜெயம் ரவியின் அடுத்த படத்தில் ஜோடியாக நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இந்தப் படத்தை புதுமுக இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாகவும், இது குறித்த அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த ‘போகன்’ திரைப்படத்தில் காஜல் அகர்வால் நடிக்க விருப்பதாகக் கூறப்பட்டது.

ஆனால் ஒரு சில காரணங்களால் அவரால் அந்தப் படத்தில் நடிக்க முடியாததால் அவருக்குப் பதிலாக ஹன்சிகா நடித்தார். தற்போது புதிய படம் மூலம் ஜெயம் ரவியுடன் இணைய இருக்கிறார் காஜல் அகர்வால்.

ஜெயம் ரவி அடுத்து தனது அண்ணன் மோகன்ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2 படத்தில் நடிக்கிறார். தனி ஒருவன் வெளியாகி 3 ஆண்டுகள் முடிவடைவதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


Post your comment





Related News
விஜய்யை பார்க்க வந்த பிரம்மாண்ட கூட்டம் – இதுவரை சொல்லாத ரகசியத்தை சொன்ன நடிகை!
காஜல் அகர்வாலின் புதிய அவதாரம்
அனைத்து துறைகளிலும் மோசமானவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள் - காஜல் அகர்வால்
காஜல் அகர்வாலுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு
நடிகரை திருமணம் செய்ய மாட்டேன் - காஜல் அகர்வால்
மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions