நான் ஒரு அழகான சிற்பம் - காஜல் அகர்வால்

Bookmark and Share

நான் ஒரு அழகான சிற்பம் - காஜல் அகர்வால்

'மகதீரா' படம், காஜல் அகர்வாலை தெலுங்கு திரையுலகில் ஒரு இளவரசியாகவே கொண்டாட வைத்து விட்டது. அதன் பிறகுதான் அவர் மிகவும் பாப்புலர் ஆன நடிகையானார்.

தொடர்ச்சியாக தெலுங்கில் படங்களை நடித்து வந்தவர், ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது தமிழில் தனுஷுடன் 'மாரி' படத்தில் நடித்து முடித்து விட்டார்.

விஷாலுடன் 'பாயும் புலி' படத்தில் நடித்து வருகிறார். இப்போதிருக்கும் நடிகைகளில் கொஞ்சம் உயரமான நடிகையாகவும், நல்ல உடலமைப்புடனும் இருப்பவர் என்ற தகுதி காஜல் அகர்வாலுக்கு உண்டு.

அதனால்தானோ என்னவோ தன்னை ஒரு அழகான சிற்பம் என அவரே சொல்லி பெருமைப்பட்டுக் கொள்கிறார்.“சிறந்த சிற்பிகளின் கைவண்ணத்தில் உருவான படங்களால் அழகான சிற்பமாக இருப்பவள் நான்.

திரையுலகத்திற்குள் வரும் போது எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் வந்தேன். எவ்வளவு நாள் என்னால் தாக்குப் பிடிக்க முடியும் என்றெல்லாம் யோசிக்கவேயில்லை.

நான் எதிர்பார்க்காமலேயே இத்தனை ஆண்டுகளாக முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருக்கிறேன். என்னுடைய இந்தப் பயணமே என்னை ஆச்சரியப்படுத்துகிறது. இப்போது என்னை நானும் ஒரு நடிகை என பெருமையுடன் சொல்லிக் கொள்வேன்.

தற்போது நடிப்பை மட்டுமல்லாமல் ஒரு மாணவியாக பல விஷயங்களையும் கற்று வருகிறேன். ஒரு நாள் அவை எனக்குப் பயன்படும் என நம்புகிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
காஜல் அகர்வாலின் புதிய அவதாரம்
அனைத்து துறைகளிலும் மோசமானவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள் - காஜல் அகர்வால்
காஜல் அகர்வாலுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு
நடிகரை திருமணம் செய்ய மாட்டேன் - காஜல் அகர்வால்
மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions