மெதுவாக முன்னேறும் காஜல் அகர்வால்

Bookmark and Share

மெதுவாக முன்னேறும் காஜல் அகர்வால்

2015ம் ஆண்டு நடிகைகளுக்குள் பலத்த போட்டி  ஏற்படுவது உறுதி. ஒவ்வொரு ஹீரோயினுமே பல பெரிய படங்களைத் தங்கள் வசமாக்கியிருப்பதுதான் அதற்குக் காரணம். நயன்தாரா கையில் தற்போது ஆறேழு படங்கள் உள்ளன.

ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்தால் கூட இந்த ஆண்டில் நயன்தாரா நடிக்கும் படங்கள்தான் அதிகம் வெளிவரும். அவற்றில் சூர்யாவுடன் 'மாஸ்', விஜய் சேதுபதியுடன் 'நானும் ரௌடிதான்' ஆகியவை குறிப்பிட வேண்டியவை.

நயன்தாராவின் படங்களில் முதலில் 'நண்பேன்டா' படம் ஏப்ரல் 2ம் தேதி வெளியாக உள்ளது. அடுத்து ஹன்சிகா விஜய்யுடனும், ஜெயம் ரவியுடனும் நடித்து வருகிறார். ஸ்ருதிஹாசன் விஜய்யுடனும், அடுத்து அஜித்துடனும் நடிக்க உள்ளார். எமி ஜாக்சன் தனுஷுடனும், உதயநிதி ஸ்டாலினுடனும் நடித்து வருகிறார்.

சமந்தா விக்ரமுடனும், அடுத்து விஜய்யுடனும் நடிக்க உள்ளார். காஜல் அகர்வால் தனுஷுடனும், விஷாலுடனும் நடித்து வருகிறார். அடுத்து விக்ரமுடன் நடிக்க உள்ளார். கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒவ்வொரு முன்னணி ஹீரோயின்கள் கையிலும் சில முக்கியமான படங்கள் உள்ளன.

அதனால், இந்த ஆண்டில் யார் முன்னணியில் வரப் போகிறார்கள் என்பதில் பலத்த போட்டி இருக்கும். கடந்த ஆண்டில் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்த காஜல் அகர்வால் இந்த ஆண்டில் மெதுவாக மூன்று படங்களைக் கைப்பற்றி விட்டார். படங்கள் வெற்றி பெறும் போது யார் முதலிடத்தைப் பிடிக்கப் போகிறார்கள் என்பது தெரிந்து விடும்.


Post your comment





Related News
காஜல் அகர்வாலின் புதிய அவதாரம்
அனைத்து துறைகளிலும் மோசமானவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள் - காஜல் அகர்வால்
காஜல் அகர்வாலுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு
நடிகரை திருமணம் செய்ய மாட்டேன் - காஜல் அகர்வால்
மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions