பிரபல நடிகர் கலாபவன் மணி கொச்சியில் காலமானார்

Bookmark and Share

பிரபல நடிகர் கலாபவன் மணி கொச்சியில் காலமானார்

பிரபல நடிகர் கலாபவன் மணி கேரளாவில் காலமானார். அவருக்கு வயது 45.

மலையாள நடிகரான கலாபவன் மணி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்திருக்கிறார். மலையாளத்தில் நாயகனாவும், தமிழ், தெலுங்கில் குணச்சித்திரம் மற்றும் வில்லனாகவும் நடித்திருக்கிறார். தமிழில் ‘ஜெமினி’, ‘மழை’, ‘வேல்’, ‘ஆறு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் கமல் நடிப்பில் வெளியான ‘பாபநாசம்’ படத்தில் போலீசாக நடித்திருந்தார். இப்படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இவர் தேசிய விருது, கேரள மாநில சிறந்த நடிகருக்கான விருது என பல விருதுகளை பெற்றிருக்கிறார். 

இவருக்கு நுரையீரல் மற்றும் கிட்னி பிரச்சனை காரணமாக அவதிபட்டு அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.

இந்நிலையில், உடல்நிலை மோசமாகி கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இன்று திடீரென்று சிகிச்சை பலனின்றி இன்று மாலை 6 மணியளவில் கலாபவன் மணி உயிர் பிரிந்தது.


Post your comment





Related News
பொன்னியின் செல்வன் படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா? பாகுபலிக்கு சவால்விடும் மணிரத்னம்!
இந்த மகிழ்ச்சியை ரஜினிகாந்த், முருகதாசுடன் பகிர்ந்து கொள்கிறேன் - எஸ்.ஜே.சூர்யா
ரஜினிகாந்தை தாக்கிப் பேசிய சுப்ரமணியன் சுவாமி
விஜய், அஜித்துடன் நடித்த காமெடி நடிகரின் அடுத்த அதிரடி!
விஜய் சேதுபதி, கார்த்தி, பிரபுதேவா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட பல துறையினருக்கு கலைமாமணி விருது அறிவிப்பு
மணிகர்ணிகா ஆக்‌ஷன் காட்சிகளுக்காக ஒருநாளில் 12 மணிநேரம் செலவழித்தோம் - கங்கனா
அமிதாப், ஐஸ்வர்யாராய், விக்ரம், ஜெயம்ரவி, விஜய்சேதுபதி, சிம்பு - மணிரத்னம் படத்தில் நட்சத்திர பட்டாளம்
மோசமான வாழ்க்கை முறையால் எளிதில் நோயால் பாதிக்கப்பட்டேன் - மனிஷா கொய்ராலா
ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தும் - கங்கனா ரணாவத்
கதையும், கதாபாத்திரமும் தான் எனக்கு முக்கியம் - மனீஷா யாதவ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions