பிவிபி நிறுவனத்தின் படத்தில் மெட்ராஸ் கலையரசன்!

Bookmark and Share

பிவிபி நிறுவனத்தின் படத்தில் மெட்ராஸ் கலையரசன்!

அட்டகத்தி படத்தில் தினேஷை நடிக்க வைத்த டைரக்டர் ரஞ்சித், அதையடுத்து இயக்கிய மெட்ராஸ் படத்தில் கார்த்தி ஹீரோ என்றாலும், அவருக்கு இணையான இன்னொரு வேடத்தில் அன்பு என்ற கேரக்டரில் கலையரசனை நடிக்க வைத்தார்.

அதற்கு முன்பே சில படங்களில் அவர் நடித்திருந்தபோதும் இந்த படத்தில்தான் வெளியில் தெரியும் அளவுக்கு வெயிட்டான ரோலில் நடித்தார் கலையரசன். அந்த மெட்ராஸ் படம் வெளியான நேரத்தில் கார்த்தி-கேத்ரின் தெரசா ஜோடியாக நடித்தபோதும், கலையரசன்- ரித்விகா ஜோடியே பெரிதாக பேசப்பட்டது.

அதனால், அதையடுத்து ஷோலோ ஹீரோவாக பல படங்களில் கமிட்டாகி விட்டார் கலையரசன். அந்த வகையில், உருமீன், ஜின், ராஜா மந்திரி உள்பட பல படங்களில் கமிட்டாகி வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார்.

குறிப்பாக, சிவகார்த்திகேயன்,விஜயசேதுபதி, தினேஷ் போன்ற ஹீரோக்களின் கால்சீட் கிடைக்காத இயக்குனர்கள் அடுத்தபடியாக கலையரசனைத்தான் நாடிச்சென்று கொண்டிருக்கிறார்கள்.

மேலும், தற்போது 8 படங்களை தயாரித்துக்கொண்டிருக்கும் பிவிபி நிறுவனமும் தங்களது ஒரு படத்துக்கு கலையரசனை தற்போது புக் பண்ணியிருக்கிறது.


Post your comment





Related News
ரஜினியை தொடர்ந்து டி.ஆர் சந்தித்த நடிகர் யார் தெரியுமா? நீங்களே பாருங்க!
சிம்புவுக்கு முன்பே திருமணம் செய்துகொள்ளும் குறளரசன்
நடிகர் சிம்பு வீட்டில் திருமண விசேஷம், சைலன்ட்டாக நடக்கும் வேலைகள்!
விஜய் சேதுபதி, கார்த்தி, பிரபுதேவா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட பல துறையினருக்கு கலைமாமணி விருது அறிவிப்பு
வடிவேலுக்காக காத்திருக்கும் படக்குழு
கேரள அரசு சார்பில் பி.சுசீலாவுக்கு அரிவராசனம் விருது
காதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்துக்குக் கலைஞர் பெயரைச் சூட்டுங்கள் கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்..!
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions